பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை, சர்வதேச மகளிர் தினம் 2024-ஐ கொண்டாடவுள்ளது
Posted On:
07 MAR 2024 12:16PM by PIB Chennai
மகளிரின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மகளிர் அதிகாரமளித்தல், பாலின சமத்துவத்தை அடைவதற்குத் தேவையான கொள்கை நடவடிக்கைகள் ஆகியவற்றின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 2024 மார்ச் 8 அன்று பிற்பகல் 3 மணிக்கு "குடிமைப்பணியில் மகளிர்" என்ற தலைப்பில் காணொலிக்காட்சி வாயிலான இணையக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து அமைச்சகங்கள் / துறைகள், மாநில நிர்வாகத் துறைகளின் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்கின்றனர்.
மத்திய அரசின் விளையாட்டுத் துறை செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி, உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் திருமதி அனிதா பிரவீன், நுகர்வோர் விவகாரங்கள் துறையின் சிறப்பு அதிகாரி திருமதி நிதி கரே ஆகியோர் இந்த இணையக் கருத்தரங்கில் முன்னணி பேச்சாளர்களாக பங்கேற்க உள்ளனர்.
***
AD/IR/RS/KV
(Release ID: 2012159)
Visitor Counter : 92