பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு இணைப்புத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமைக்கப்பட்ட எஸ்பிளனேட் - ஹவுரா மைதான் மெட்ரோ பாதையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்
ஹவுரா மைதானம்-எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவில் நமது நாட்டில் பெரிய நதியின் கீழே நீருக்கடியில் மெட்ரோ போக்குவரத்து சுரங்கப்பாதை இருப்பது பெருமைக்குரிய தருணம்: பிரதமர்
Posted On:
06 MAR 2024 1:29PM by PIB Chennai
கொல்கத்தாவில் இன்று ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு இணைப்புத் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நகர்ப்புற போக்குவரத்துத் துறையை பூர்த்தி செய்யும் வளர்ச்சித் திட்டங்களில் மெட்ரோ ரயில், பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன.
கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே நீருக்கடியில் அமைந்த முதல் மெட்ரோ ரயில் திட்டமாகும். எஸ்பிளனேடு - ஹவுரா மைதான் மெட்ரோ வழித்தடத்தில் அமைந்துள்ள அனைத்து மெட்ரோ நிலையங்களையும் மேலோட்டமாகப் பார்வையிட்ட பிரதமர், மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"மெட்ரோ பயணம் மறக்கமுடியாததாக மாறியது. இந்தப் பயணத்தில் என்னுடன் கலந்துரையாடிய இளைஞர்களுக்கும், இந்தத் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கும் நன்றி. ஹூக்ளி ஆற்றின் அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாகவும் நாங்கள் பயணித்தோம்."
"நகரத்தின் மெட்ரோ கட்டமைப்பு கணிசமாக மேம்படுத்தப்படுவதால் கொல்கத்தா மக்களுக்கு இது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். மெட்ரோ ரயில் இணைப்பு ஒரு ஊக்கத்தைப் பெறுவதுடன், போக்குவரத்து நெரிசல் குறையும். ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவில் நீருக்கடியிலான மெட்ரோ சுரங்கப்பாதை அமைந்துள்ளது. நாட்டிலேயே ஆற்றின் கீழே அமைந்துள்ள முதல் மெட்ரோ ரயில் திட்டமாக இது இருப்பது பெருமைக்குரிய தருணம்.”
"கொல்கத்தா மெட்ரோவின் மறக்க முடியாத தருணங்கள். நான் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன், புதிய உத்வேகத்துடன் அவர்களுக்கு சேவை செய்வேன்.”
இந்த நிகழ்வில் மேற்கு வங்க ஆளுநர் திரு சி.வி.ஆனந்த போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
நகர்ப்புறப் போக்குவரத்தை எளிதாக்குவதற்கான வழிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம் – எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவு, கவி சுபாஷ் – ஹேமந்தா முகோபாத்யாயா மெட்ரோ பிரிவு, தரடாலா – மஜெர்ஹட் மெட்ரோ பிரிவு (ஜோகா-எஸ்பிளனேட் பாதையின் ஒரு பகுதி) ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூபி ஹால் கிளினிக் முதல் ராம்வாடி விரிவாக்கம் வரையிலான புனே மெட்ரோ, கொச்சி மெட்ரோ ரயில் கட்டம் I நீட்டிப்பு திட்டம், எஸ்என் சந்திப்பு மெட்ரோ நிலையத்திலிருந்து திரிப்புனிதுரா மெட்ரோ நிலையம் வரை, ஆக்ரா மெட்ரோவின் தாஜ் கிழக்கு வாயில் முதல் மன்கமேஷ்வர் வரையிலான நீட்டிப்பு, தில்லி-மீரட் ஆர்ஆர்டிஎஸ் வழித்தடத்தின் துஹாய்-மோடிநகர் (வடக்கு) பிரிவு ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டன. இந்தப் பிரிவுகளில் ரயில் சேவைகளை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிம்ப்ரி சின்ச்வாட் மெட்ரோ – நிக்டி இடையேயான புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை நீட்டிப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்தப் பிரிவுகள் சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதுடன், தடையற்ற, எளிதான மற்றும் வசதியான போக்குவரத்து இணைப்பை வழங்க உதவும். கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம் - எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவில் இந்தியாவின் முதல் நீருக்கடியில் போக்குவரத்து சுரங்கப்பாதை உள்ளது. ஹவுரா மெட்ரோ நிலையம் இந்தியாவின் ஆழமான மெட்ரோ நிலையமாகும். மேலும், இன்று தொடங்கப்பட்ட தரடாலா – மஜெர்ஹட் மெட்ரோ பிரிவில் உள்ள மஜெர்ஹாட் மெட்ரோ நிலையம், ரயில் பாதைகள், நடைமேடைகள் மற்றும் கால்வாய்களுக்கு அப்பால் ஒரு தனித்துவமான உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையமாகும். ஆக்ரா மெட்ரோவின் பிரிவு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். ஆர்.ஆர்.டி.எஸ் பிரிவு என்.சி.ஆரில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும்
***
(Release ID: 2011855)
PKV/AG/RR
(Release ID: 2011874)
Visitor Counter : 154
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam