குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள அமிர்த தோட்டத்தை பார்வையாளர்கள் மாலை 6 மணி வரை பார்வையிடலாம்

Posted On: 02 MAR 2024 11:40AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த திட்டத்தின் அமிர்த தோட்ட விழா-1,-இன் கீழ்  2024  மார்ச் 31, வரை பொதுமக்கள் பார்வைக்காக அமிர்த தோட்டம் திறந்திருக்கும். திங்கட்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை (கடைசி நுழைவு - மாலை 05.00 மணி) மக்கள் தோட்டத்துக்குச் செல்லலாம். முன்னதாக காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (கடைசி நுழைவு - மாலை 4.00 மணி) மட்டுமே பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

அமிர்த தோட்டத்தை பார்வையிட https://visit.rashtrapatibhavan.gov.in/visit/amrit-udyan/rE  என்ற இணையதள இணைப்பில் பார்வையாளர்கள் முன்பதிவு செய்யலாம். பார்வையாளர்கள் அதற்கான கவுண்டர்கள் அல்லது குடியரசுத் தலைவர் மாளிகை நுழைவாயில் எண் 12 க்கு அருகிலுள்ள சுய சேவை வசதியில் பதிவு செய்ய வேண்டும்.

***

ANU/AD/BS/DL



(Release ID: 2010876) Visitor Counter : 57