பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
29 FEB 2024 10:11AM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
"மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரியில் நேரிட்ட சாலை விபத்து மிகவும் துயரமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான நேரத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமையை அளிக்கட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளிலும் ஈடுபட்டுள்ளது: பிரதமர் @narendramodi"
*******
(Release ID: 2009991)
PKV/IR/AG/KRS
(रिलीज़ आईडी: 2010020)
आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam