பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படை- போதைப் பொருள் தடுப்பு அமைப்பு கடலில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது
Posted On:
28 FEB 2024 9:41AM by PIB Chennai
இந்தியக் கடற்படையும், போதைப் பொருள் தடுப்பு அமைப்பும் ஒருங்கிணைந்து கடலில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுமார் 3300 கிலோ கடத்தல் போதைப் பொருட்களை (3089 கிலோ கிராம் சரஸ், 158 கிலோ கிராம் மெத்தாம்பெட்டாமைன், 25 கிலோ கிராம் மார்ஃபின்) கைப்பற்றியது. போதைப் பொருள் தடுப்பு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில், இந்தியக் கடற்படையின் கடலோரக் கண்காணிப்பு விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு தகவல் மூலம், இந்தியக் கடற்படையின் கப்பலில் இருந்த வீரர்கள் இந்திய நீர்வழிப்பாதையில் சோதனை மேற்கொண்டு சந்தேகத்திற்குரிய படகைச் சுற்றிவளைத்து கடத்தல் பொருட்களைக் கைப்பற்றினார்கள்.
பின்னர் கைப்பற்றப்பட்ட படகை அருகில் உள்ள துறைமுகத்திற்குக் கொண்டு சென்று கடத்தலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
***
ANU/PKV/IR/AG/KRS
(Release ID: 2009735)
Visitor Counter : 79