இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'நாட்டுக்கான எனது முதல் வாக்கு' பிரச்சாரத்தில் இணைய திரு அனுராக் சிங் தாக்கூர் அழைப்பு விடுத்துள்ளார்

प्रविष्टि तिथि: 27 FEB 2024 2:55PM by PIB Chennai

நாட்டுக்கான எனது முதல் வாக்கு' பிரச்சாரத்தில் அனைவரும் பங்கேற்ற வேண்டும் என்றும், இளம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றும் மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் ''நாட்டுக்கான எனது முதல் வாக்கு' பாடலை  திரு அனுராக் சிங் தாக்கூர்  பகிர்ந்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது,:

"நமது பிரதமர் @narendramodi  தனது சமீபத்திய மனதின் குரல் உரையில் ஒரு தெளிவான அழைப்பை விடுத்தார். நாடு அதன் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவிற்கு தயாராகி வரும் நிலையில், #MeraPehlaVoteDeshKeLiye பிரச்சாரத்தில் சேரவும், இளம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது #MeraPehlaVoteDeshKeLiye பாடலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிரச்சாரத்தை நம் சொந்த வழிமுறைகளில் முன்னோக்கி எடுத்துச் செல்வோம்.

இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இணையதளத்தில் நமது கூட்டு குரல்களின் சக்தியைக் கொண்டாடுவோம்

 @mygovindia கல்லூரிகளில்!"

***

ANU/PKV/IR/AG/KV

 


(रिलीज़ आईडी: 2009402) आगंतुक पटल : 144
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Telugu , Malayalam , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati