பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நியூஸ் 9 உலக உச்சிமாநாட்டில் பிரதமர் உரை

Posted On: 26 FEB 2024 9:34PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற நியூஸ் 9 உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். “மிகப்பெரிய உச்சத்திற்குத் தயாராகும் இந்தியா” என்பது இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருளாகும்.  
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், டிவி-9 செய்தியாளர் குழு இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது என்றார். அதன் பன்மொழி செய்தி தளங்கள் டிவி 9 நிகழ்ச்சியை இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தின் பிரதிநிதியாக ஆக்கியுள்ளன என்று பிரதமர் கூறினார். 

கடந்த காலத்தின் தலைமையின் எதிர்மறையான பார்வையையும், ஊழல், மோசடிகள், கொள்கை முடக்கம் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவை தேசத்தின் அடித்தளத்தை உலுக்கியதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார், மேலும் .உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா நுழைந்திருப்பதை பிரதமர் குறிப்பிட்டார். "21-ஆம் நூற்றாண்டின் இந்தியா சிறியதாக நினைக்கவில்லை. நாம் எதைச் செய்தாலும், சிறப்பாகவும், மிகப்பெரியதாகவும் செய்கிறோம். இந்தியாவுடன் இணைந்து பயணிப்பதன் பலனைக் கண்டு  உலகம் வியக்கிறது" என்று அவர் கூறினார். 

2014-க்கு முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சாதனைகளைக் குறிப்பிட்ட பிரதமர், அந்நிய நேரடி முதலீடு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 640 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது, இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி, இந்தியாவின் கொவிட் தடுப்பூசி மீதான நம்பிக்கை மற்றும் நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆகியவை அரசின் மீது மக்களுக்கு அதிகரித்து வரும் நம்பிக்கையின் அடையாளமாகும் என்றார். நாட்டில் பரஸ்பர நிதி முதலீடுகள் குறித்து பேசிய பிரதமர், 2014-ஆம் ஆண்டில் ரூ .9 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டதாகவும், 2024-ஆம் ஆண்டில் ரூ .52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். "தேசம் வலிமையுடன் முன்னேறி வருகிறது என்பதை இது குடிமக்களுக்கு நிரூபிக்கிறது" என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறினார்.  
"தேசத்திற்கு முன்னுரிமை என்ற கொள்கையை முதன்மையாகக் கொண்டு எங்கள் அரசு முன்னேறி வருகிறது" என்று குறிப்பிட்ட பிரதமர், பழைய சவால்களைத் தீர்க்க அரசு எடுத்த முக்கிய முடிவுகளைக் குறிப்பிட்டார். சட்டப்பிரிவு 370-இன் ரத்து, ராமர் கோயில் கட்டுமானம், முத்தலாக் தடைச் சட்டம், நாரி சக்தி வந்தன் சாதனம், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம், பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கம் ஆகியவை குறித்து அவர் பேசினார். இதுபோன்ற முழுமையடையாத பணிகள் அனைத்தையும் தேசத்திற்கு முன்னுரிமை  என்ற சிந்தனையுடன் அரசு முடித்துள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

தமது மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியாவின் திறனை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார். வரும் 5 ஆண்டுகள், முன்னேற்றத்திற்கான, வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கான  ஆண்டுகளாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

**** 

ANU/PKV/IR/AG/KV


(Release ID: 2009300) Visitor Counter : 69