குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் 2024 பிப்ரவரி 20 அன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகருக்குப் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 19 FEB 2024 11:58AM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024 பிப்ரவரி 20, அன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகருக்குப் பயணம் மேற்கொள்கிறார். அம்மாநிலத்திற்கு அவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

ஒருநாள் பயணமாக அங்கு செல்லவுள்ள திரு தன்கர், அருணாச்சலப் பிரதேசத்தின் 38-வது மாநில தினக் கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

இந்த ஒரு நாள் பயணத்தின் போது, இட்டா நகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு குடியரசுத் துணைத் தலைவர் செல்ல உள்ளார்.

***

ANU/PKV/IR/AG/DL


(रिलीज़ आईडी: 2007024) आगंतुक पटल : 727
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese , Punjabi