பிரதமர் அலுவலகம்

சமண சமய ஞானி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் சமாதி அடைந்ததற்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 18 FEB 2024 10:58AM by PIB Chennai

சமண சமய ஞானி ஆச்சார்யா வித்யாசாகர் மகாராஜ் சமாதி நிலை அடைந்ததையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல. தெரிவித்துள்ளார்.

ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மக்கள் மத்தியில் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த ஆச்சார்யா அவர்கள் ஆற்றிய மதிப்புமிக்க முயற்சிகள் என்றும் நினைவுகூரப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். அவர் வாழ்நாள் முழுவதும் வறுமை ஒழிப்பு, சமூகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார் என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் உள்ள சந்திரகிரி ஜெயின் கோவிலில் ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜை சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ள பிரதமர், அந்தச் சந்திப்பு தமக்கு மறக்க முடியாததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகாராஜ் அவர்களின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காக அவர் மேற்கொண்ட மதிப்புமிக்க முயற்சிகள் எப்போதும் நினைவுகூரப்படும். அவர் தமது வாழ்நாள் முழுவதும் வறுமையை ஒழிப்பதிலும், சமூகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதிலும் ஈடுபட்டார். அவரது ஆசீர்வாதங்களை நான் தொடர்ந்து பெற்று வருவது எனது அதிர்ஷ்டம். கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் உள்ள சந்திரகிரி ஜெயின் கோவிலில் அவரைச் சந்தித்தது எனக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கிறது. அப்போது ஆச்சார்யா ஜி-யிடமிருந்து மிகுந்த அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றேன். சமூகத்திற்கு அவரது இணையற்ற பங்களிப்பு நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்."

*******

ANU/PKV/PLM/DL



(Release ID: 2006890) Visitor Counter : 84