பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த குஜராத் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
10 FEB 2024 5:25PM by PIB Chennai
வணக்கம்!
எனது குஜராத் சகோதர, சகோதரிகளே! எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்? அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறேன். இன்று, "வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த குஜராத்" என்ற மாபெரும் இயக்கம் தொடங்குகிறது. குஜராத்தின் 182 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும், குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தொழில்நுட்பத்தின் மூலம் இந்தத் திட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. 'வளர்ச்சியடைந்த குஜராத்' பயணத்தில் ஒவ்வொருவரும் உற்சாகத்துடன் இணைந்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலீட்டைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் குஜராத்திற்கும், நாட்டிற்கும் மிகவும் முக்கியமானது.
சகோதர சகோதரிகளே,
இன்று, பனஸ்கந்தாவிலிருந்து ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். நமது பனஸ்கந்தா மாவட்டம், அதாவது நமது வடக்கு குஜராத் முழுவதும் இங்கு, மக்கள் தண்ணீருக்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் வடக்கு குஜராத்தைச் சேர்ந்த நமது விவசாயிகள் துளி நீரில் அதிகப் பயிர், சொட்டு நீர் பாசனம், நவீன நீர்ப்பாசனம் போன்ற முன்முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த முன்முயற்சிகள் காரணமாக இன்று நமது வேளாண் துறை செழிப்பாக உள்ளது.
மெஹ்சானா, அம்பாஜி, படான் போன்ற இடங்கள் அனைத்தும் வேளாண்மையில் புதிய உச்சங்களை எட்டி வருகின்றன. அம்பாஜி தாமில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாடு முழுவதும் 'வளர்ச்சியைடந்த பாரதம் லட்சியப் பயணம்' வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை நாம் கண்கூடாகக் கண்டோம். மோடியின் உத்தரவாத வாகனம் கிராமங்களில் பயனாளிகளைத் தேடி பயணிம். செய்யும். சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் முதல் முறையாக மத்திய அரசு நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிராமங்களுக்கு நேரடியாகச் சென்றுள்ளது. நமது குஜராத்திலும் கோடிக்கணக்கான மக்கள் இந்தத் திட்டங்களில் இணைந்துள்ளனர். அரசின் இது போன்ற முயற்சிகள் மூலம், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் நடந்த மிகப்பெரிய பணியாக இதை நான் கருதுகிறேன். நீங்களும் அதில் திருப்தி அடைவீர்கள். 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இந்த 25 கோடி தோழர்களும் அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ளனர். பணத்தை சரியாகப் பயன்படுத்தினார்கள், திட்டங்களில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள், வறுமையை வெற்றிகரமாகத் தோற்கடித்தார்கள்.
சகோதர சகோதரிகளே,
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்துவதில் குஜராத் எப்போதும் முன்னணியில் உள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தொலைநோக்குத் திட்டத்தின் மூலம் தற்போது குஜராத்தில் 1.25 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் சொந்த வீடுகளைப் பெற்றுள்ளன. நகர்ப்புறங்களில் சுமார் 8 லட்சம் வீடுகளும் ஊரகப்பகுதிகளில் சுமார் 5 லட்சம் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன
நண்பர்களே,
குஜராத் ஒரு வர்த்தக மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குஜராத் தனது வளர்ச்சிப் பயணத்தில், தொழில் வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இன்று வீடுகளைப் பெற்றுள்ள அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்கான எனது நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
நன்றி.
**********
(Release ID: 2004828)
ANU/SMB/IR/RS/KRS
(Release ID: 2005685)
Visitor Counter : 85
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam