பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது: பிரதமர்

Posted On: 09 FEB 2024 12:59PM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு செளத்ரி சரண் சிங்கிற்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் நலனுக்காகத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்ததற்காக மறைந்த தலைவரை அவர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது எங்கள் அரசின் பாக்கியமாகும். இந்த கௌரவம் நாட்டிற்கு அவர் செய்த இணையற்ற பங்களிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தமது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தார். உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அவர் எப்போதும் தேச நிர்மாணத்திற்கு உத்வேகம் அளித்து வந்தார். நெருக்கடி நிலையையும் எதிர்த்து உறுதியாக நின்றார். நமது விவசாய சகோதர சகோதரிகளிடம் அவர் காட்டிய ஈடுபாடும், அவசர நிலையின் போது ஜனநாயகத்தின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பும் நாடு முழுவதற்கும் உத்வேகம் அளித்தது."

----

(Release ID: 2004326)

ANU/SMB/PKV/KPG/RR



(Release ID: 2004430) Visitor Counter : 68