பிரதமர் அலுவலகம்
மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதில்
Posted On:
05 FEB 2024 8:24PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார்.
குடியரசுத்தலைவரின் உரை இந்தியாவின் முன்னேற்றத்தின் வேகம் மற்றும் அளவைக் குறிக்கும் உண்மைகளின் அடிப்படையில் அமைந்த மிகப்பெரிய ஆவணம் என்று அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், மகளிர் சக்தி, இளைஞர் சக்தி, ஏழைகள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு தூண்களை மேம்படுத்தி வலுப்படுத்தினால் மட்டுமே நாடு வேகமாக வளர்ச்சியடையும் என்ற உண்மையையும் சுட்டிக்காட்டினார். இந்த நான்கு தூண்களை வலுப்படுத்துவதன் மூலம் நாடு வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதற்கான பாதையை இந்த உரை ஒளிரச் செய்கிறது என்று அவர் கூறினார்.
வலுவான எதிர்க்கட்சி தேவை என்பதை வலியுறுத்திய பிரதமர், வாரிசு அரசியலின் அர்த்தத்தை விளக்கினார். ஒரு குடும்பத்தை நடத்தும், அதன் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அரசியல் கட்சி, குடும்ப உறுப்பினர்களால் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ஒரு அரசியல் கட்சி மக்களின் ஆதரவுடன் தனது சொந்த பலத்தில் அரசியலில் முன்னேறுவதே வாரிசு அரசியலாகக் கருதப்படுகிறது என்று தெரிவித்தார். "தேசத்திற்கு சேவை செய்ய இங்கு வந்துள்ள அரசியலில் உள்ள அனைத்து இளைஞர்களையும் நான் வரவேற்கிறேன்" என்று பிரதமர் கூறினார். அரசியலில் ஒரு கலாச்சாரம் உருவாகி வருவது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், நாட்டில் நடைபெறும் முன்னேற்றங்கள் ஒரு நபருக்கு சொந்தமானது அல்ல, மாறாக அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது என்றார்.
இன்று உலகத்தால் பாராட்டப்படும் இந்தியாவின் வலுவான பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், "தற்போதைய அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியா உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்பது மோடியின் உத்தரவாதம்" என்று கூறினார். தற்போதைய அரசு கிராமப்புற ஏழைகளுக்காக 4 கோடி வீடுகளையும், நகர்ப்புற ஏழைகளுக்காக 80 லட்சம் உறுதியான வீடுகளையும் கட்டியுள்ளது என்று அவர் அவையில் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், 40,000 கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் எட்டப்பட்டுள்ளன, 17 கோடி கூடுதல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, துப்புரவு வசதி 40 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்திய குடிமக்களின் பலம் மற்றும் திறன்கள் மீது தற்போதைய அரசு கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார். அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கச் செய்வதில் அரசின் அர்ப்பணிப்பையும் உறுதியையும் வளர்ச்சி அடைந்த இந்தியாவின் லட்சிய யாத்திரை காட்டுகிறது என்று அவர் கூறினார். ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "அயோத்தியில் உள்ள ராமர் கோயில் இந்தியாவின் சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு தொடர்ந்து ஆற்றலை அளிக்கும்" என்று கூறினார்.
தற்போதைய அரசின் மூன்றாவது பதவிக்காலம் முக்கிய முடிவுகளில் கவனம் செலுத்தும் என்று பிரதமர் திரு மோடி வலியுறுத்தினார். அரசின் மூன்றாவது பதவிக்காலம் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு நாட்டின் அடித்தளத்தை அமைக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் 140 கோடி குடிமக்களின் திறன்களில் நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று கூறினார். ஏழைகளுக்கு சரியான வளங்களும், சுயமரியாதையும் வழங்கப்பட்டால் வறுமையை ஒழிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் பெண் சக்திக்கு அதிகாரம் அளிப்பதில் அரசின் பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். 10 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் திறன்கள் மீது நம்பிக்கை தெரிவித்த அவர், வரும் ஆண்டுகளில், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை நாடு காணும் என்று குறிப்பிட்டார். பெண் குழந்தை பிறப்பைக் கொண்டாடும் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
நாட்டின் வளர்ச்சிக்காக தோளோடு தோள் நின்று செயல்பட முன்வருமாறு அவையின் உறுப்பினர்களை வலியுறுத்தி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 2002816)
ANU/PKV/BR/RR
(Release ID: 2002926)
Visitor Counter : 104
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam