பிரதமர் அலுவலகம்
உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள், டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
Posted On:
27 JAN 2024 2:16PM by PIB Chennai
ஜனவரி 28 அன்று நண்பகல் 12 மணிக்கு உச்ச நீதிமன்ற அரங்கில் உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டை தொடங்கி வைக்கும் பிரதமர், உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள் , டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் உள்ளிட்ட மக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்.
உச்ச நீதிமன்ற டிஜிட்டல் அறிக்கைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நாட்டின் மக்களுக்கு இலவசமாகவும், மின்னணு வடிவத்திலும் கிடைக்கச் செய்வதே. டிஜிட்டல் அறிக்கைகளின் முக்கிய அம்சமாகும். இதன்படி, 1950ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற அறிக்கைகளின் 36,308 வழக்குகளை உள்ளடக்கிய அனைத்து 519 தொகுதிகளும், டிஜிட்டல் வடிவத்தில், புக்மார்க் செய்யப்பட்ட, பயனருக்கு ஏற்றதாக மற்றும் திறந்த அணுகலுடன் கிடைக்கும்.
மின்-நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் மின்னணு வடிவத்தில் நீதிமன்ற பதிவுகளை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு கிடைக்கச் செய்வதற்கான ஒரு முயற்சியே டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 என்பதாகும். இது நிகழ்நேர அடிப்படையில் பேச்சு மொழியை எழுத்து வடிவில் படியெடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் புதிய இணையதளத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். புதிய இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருமொழி வடிவத்தில் பயனருக்கு ஏற்றவகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
*****
ANU/MS/BS/DL
(Release ID: 2000045)
Visitor Counter : 128
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam