உள்துறை அமைச்சகம்

2024 குடியரசு தினத்தை முன்னிட்டுக் காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை & குடிமைப் பாதுகாப்பு சீர்திருத்தப் பணி ஆகியவற்றைச் சேர்ந்த 1132 பணியாளர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

Posted On: 25 JAN 2024 9:24AM by PIB Chennai

2024 குடியரசு தினத்தை முன்னிட்டு, காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணி ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 1132 பணியாளர்களுக்கு வீரதீர / சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு விருதுகளின் ஒட்டுமொத்த விருது சூழலை சீரமைக்கவும், மாற்றியமைக்கவும் அரசு சமீப காலங்களில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த வகையில், வீரதீரச் செயல்களுக்கான 16 பதக்கங்கள் (காவல்துறை, தீயணைப்புப் பணி, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு, சீர்திருத்தப் பணி ஆகியவற்றுக்கான) சீரமைக்கப்பட்டு கீழ்க்கண்ட நான்கு பதக்கங்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

தீரச்செயலுக்கான குடியரசுத்தலைவர் பதக்கம்

தீரச்செயலுக்கான பதக்கம்

சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம்

மெச்சத்தக்கச் சேவைக்கான பதக்கம்

பதக்கங்களின் சமீபத்திய மறுசீரமைப்பிற்குப் பிறகு, 2024 குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு, சீர்திருத்தப் பணி ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 1132 பணியாளர்களுக்கு வீரதீரச் செயல்கள் / சேவைப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

வீரதீரச் செயலுக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் 2 பேருக்கு வழங்கப்படுகிறது

வீரதீரச் செயலுக்கான பதக்கங்கள்  275 பேருக்கு வழங்கப்படுகிறது

சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கங்கள் 102 பேருக்கு வழங்கப்படுகிறது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஜி திருமதி ஆர் லலிதா லட்சுமி,  கமாண்டர் திரு எஸ். ராஜசேகரன், உதவி ஆய்வாளர் திரு ஆர் ராயப்பன்  ஆகியோர் சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் பெறுகின்றனர்.

மெச்சத்தக்க சேவைக்கான விருதுகள் 753 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1999400

-----

ANU/SMB/PKV/KPG/RR



(Release ID: 1999439) Visitor Counter : 93