சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவைக் குறிக்கும் வகையில் 'நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ இயக்கத்தைக் குடியரசு துணைத்தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 23 JAN 2024 9:25AM by PIB Chennai

இந்தியக் குடியரசின் 75-வது ஆண்டினை நினைவுகூரும் வகையில், இந்தியா முழுமைக்குமான 'நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ என்ற ஓராண்டு கால இயக்கத்தை குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாளை டாக்டர் அம்பேத்கர்  சர்வதேச மையத்தில் தொடங்கி வைக்கிறார். இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கான நமது கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதையும், நமது தேசத்தைப் பிணைக்கும் பகிரப்பட்ட மதிப்புகளைக் கொண்டாடுவதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு தழுவிய இந்த முன்முயற்சி, அரசியலமைப்புக் கட்டமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள குறிக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான பெருமை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு குடிமகனும் பல்வேறு வழிகளில் பங்கேற்கவும், நமது ஜனநாயகப் பயணத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இது வாய்ப்பளிக்கும். இந்தப் பிரச்சாரத்தின் போது விவாதிக்கப்படவுள்ள சில தலைப்புகள் வருமாறு:-

‘அனைவருக்கும் நீதி ஒவ்வொரு வீட்டிற்கும் நீதி’ என்னும் பொதுச் சேவை மையங்களின் கிராம அளவிலான தொழில்முனைவோர் மூலம் கிராமவாசிகளை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 'சட்ட உதவி மையங்கள்' திட்டம் மாற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களில் மக்களை மையமாகக் கொண்ட பல்வேறு சட்ட சேவைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கும். மாநில / யூனியன் பிரதேச அளவில், சட்ட சேவை முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும், இது தனிநபர்களுக்கு வழிகாட்டுதல், தகவல் மற்றும் அரசின் பல்வேறு சட்ட மற்றும் பிற சேவைகள், திட்டங்கள் குறித்த ஆதரவைப் பெறுவதற்கான தளங்களாக செயல்படும்.

புதிய இந்தியாவின் புதிய தீர்மானம் என்று பெயரிடப்பட்ட மற்றொரு செயல்பாடு, ஐந்து உறுதிமொழிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐந்து உறுதிமொழிகள் சுவரொட்டி தயாரிக்கும் போட்டியில் பங்கேற்பதன் மூலம் குடிமக்கள் தங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்; ஐந்து உறுதிமொழி அனுபவம் (ரீல் / வீடியோ தயாரிக்கும் போட்டி). அரசியலமைப்புச் சட்டம் குறித்த தங்கள் அறிவை ஈடுபாட்டுடன் சோதித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பையும் மக்கள் பெறுவார்கள். இந்த நிகழ்ச்சிகள் மை கவ் தளத்தில் நடைபெறும்.

மூன்றாவது திட்டமான சட்ட விழிப்புணர்வு இயக்கம், சட்டக் கல்லூரிகளால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஐந்து உறுதிமொழி செய்தியை எடுத்துச் செல்ல மாணவர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உரிமைகள், பொறுப்புகள் பற்றிய சட்டத் தகவல்களை மிகவும் ஈடுபாட்டுடனும், பொழுதுபோக்கு மற்றும் மறக்கமுடியாத வகையிலும் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது, நியாய சேது தொடங்கப்படும். இது சட்ட சேவைகளை கடைசி மைல் வரை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சட்டத் தகவல், சட்ட ஆலோசனை, சட்ட உதவி ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கும். இதனால் மேலும் உள்ளடக்கிய நியாயமான சமுதாயம் உருவாகும்.

'நீதிக்கான முழுமையான அணுகலுக்குப் புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல்' என்ற திட்டத்தின் சாதனைக் கையேடும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.

 மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், இந்தியத் தலைமை வழக்கறிஞர் திரு ஆர் வெங்கட்ரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கின்றனர்.

***

(Release ID: 1998702)

ANU/SMB/PKV/AG/RR



(Release ID: 1998752) Visitor Counter : 110