பிரதமர் அலுவலகம்

ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரத்தில் தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமியின் புதிய வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்

இந்திய வருவாய் பணியின் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 74, 75-வது பிரிவினர், பூட்டானின் ராயல் குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்

"நாட்டிற்கு ஒரு நவீன சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குவதே தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமியின் பங்கு"

"ஸ்ரீ ராமர் நல்லாட்சியின் சிறந்த அடையாளமாக இருக்கிறார், அவர் தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமிக்கும் ஒரு பெரிய உத்வேகமாக இருக்க முடியும்" என்று கூறினார்.

ஜி.எஸ்.டி., எனப்படும் நவீன முறையையும், வருமான வரியை எளிமைப்படுத்தி, முகமில்லா மதிப்பீட்டையும் அறிமுகப்படுத்தினோம். இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் சாதனை வரி வசூலுக்கு வழிவகுத்துள்ளன" என்று கூறினார்

" நாங்கள் மக்களிடமிருந்து எதை வாங்கினோமோ அதை அவர்களிடம் திருப்பியளித்ததே இது நல்ல ஆட்சி, இது ராம ராஜ்ஜியத்தின் செய்தி"

"ஊழலுக்கு எதிரான போராட்டம், ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் முன்னுரிமை"

"இந்த நாட்டில் உள்ள ஏழைகளுக்கு வளங்கள் வழங்கப்பட்டால், அவர்களே வறுமையை ஒழிப்பார்கள்&qu

Posted On: 16 JAN 2024 6:08PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரத்தில் தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாடமியின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இந்திய வருவாய்ப் பணியின் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 74, 75-வது பிரிவு பயிற்சி அதிகாரிகள், பூட்டானின் ராயல் குடிமைப் பணியின் பயிற்சி அதிகாரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.

பின்னர், உரையாற்றிய பிரதமர், பாலசமுத்திரத்தில் சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு தேசிய  அகாடமி திறக்கப்பட்டதற்காக அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பாலசமுத்திரம் பகுதியின் சிறப்புகளை எடுத்துரைத்த பிரதமர், இது ஆன்மீகம், நாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும் நாட்டின் பாரம்பரியத்தை இது பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறப்பிடம், சிறந்த சுதந்திர போராட்ட வீரர் பத்மஸ்ரீ கல்லூர் சுப்பா ராவ், புகழ்பெற்ற பொம்மலாட்ட கலைஞர் தளவாய் சலபதி ராவ் மற்றும் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் சிறந்த நிர்வாகம் ஆகியவை உத்வேகம் அளித்ததாக அவர் குறிப்பிட்டார். தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாடமியின் புதிய வளாகம் நல்லாட்சியின் புதிய பரிமாணங்களை உருவாக்கும் என்றும், நாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

திருவள்ளுவர் தினமான இன்றைய நாள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், ஜனநாயகத்தில் மக்கள் நலனுக்கு உகந்த வழிகளில் வரிகளை வசூலிப்பதில் வருவாய் அதிகாரிகளின் பங்கை சுட்டிக்காட்டினார்.

முன்னதாக பிரதமர் திரு மோடி லெபாக்சியில் உள்ள வீரபத்ரர் கோயிலுக்குச் சென்று ரங்கநாத ராமாயணத்தின் வசனங்களைக் கேட்டார். பக்தர்களுடன் பஜனை கீர்த்தனையில் பிரதமர் பங்கேற்றார். ராம் ஜடாயு சம்வாத் அருகிலேயே நடந்தது என்ற நம்பிக்கையைக் குறிப்பிட்ட பிரதமர், அயோத்தி தாமில் உள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முன் 11 நாட்கள் சிறப்பு அனுஷ்டானத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் கூறினார். இந்த புண்ணிய காலத்தில் கோவிலில் ஆசீர்வதிக்கப்பட்டதற்கு அவர் நன்றி தெரிவித்தார். நாடு முழுவதும் ராம பக்தியின் சூழலை அங்கீகரித்த பிரதமர், ஸ்ரீ ராமரின் உத்வேகம் பக்திக்கு அப்பாற்பட்டது என்று சுட்டிக்காட்டினார். ஸ்ரீ ராமர் நல்லாட்சியின் சிறந்த அடையாளமாக இருக்கிறார் என்றும், தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாடமிக்கும் ஒரு பெரிய உத்வேகமாக அவர் இருக்க முடியும் என்று கூறினார்.

மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டிய பிரதமர், ராம ராஜ்ஜியம் என்ற எண்ணமே உண்மையான ஜனநாயகத்தின் பின்னணியில் உள்ள கருத்து என்று கூறினார். ராம ராஜ்ஜிய சித்தாந்தத்தை ஆதரிப்பதற்கான காரணமான மகாத்மா காந்தியின் வாழ்க்கை அனுபவத்தை எடுத்துரைத்த அவர், ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்பட்டு அனைவருக்கும் உரிய மரியாதை கிடைக்கும் ஒரு நாட்டைப் பற்றி எடுத்துரைத்தார். "இது ராம ராஜ்ஜியத்தின் குடிமக்களைப் பற்றிச் சொல்லப்படுகிறது", என்று சமஸ்கிருத மந்திரத்தை மேற்கோள் காட்டி பிரதமர் கூறினார். "ராம ராஜ்ய வாசி, நீங்கள் தலை நிமிர்ந்து நீதிக்காகப் போராடுங்கள், அனைவரையும் சமமாக நடத்துங்கள், பலவீனமானவர்களைப் பாதுகாக்கவும், தர்மத்தை மிக உயர்ந்த மட்டத்தில் வைத்திருக்கவும், நீங்கள் ராம ராஜ்ய வசிகள்". இந்த நான்கு தூண்களில் ராம ராஜ்ஜியம் நிறுவப்பட்டது, அங்கு அனைவரும் தலைநிமிர்ந்து கண்ணியத்துடன் நடக்க முடியும், அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள், ஒடுக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், தர்மம் மிக முக்கியமானது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். "21-ம் நூற்றாண்டில், இந்த நவீன நிறுவனங்களின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்தும் நிர்வாகிகளாக, நீங்கள் இந்த நான்கு குறிக்கோள்களில் கவனம் செலுத்த வேண்டும், அவற்றை மனதில் கொள்ள வேண்டும்" என்று பிரதமர் கூறினார்.

ராம ராஜ்ஜியத்தில் வரி முறை குறித்து சுவாமி துளசிதாசரின் விளக்கத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். ராம்சரித் மானஸை மேற்கோள் காட்டிய பிரதமர், வரிவிதிப்பின் நல அம்சத்தை எடுத்துரைத்தார், மேலும் மக்களிடமிருந்து பெறப்படும் வரியின் ஒவ்வொரு பைசாவும் மக்கள் நலனுக்குச் சென்று செழிப்பைத் ஏற்படுத்தும் என்ற அவர், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வரி சீர்திருத்தங்கள் குறித்து பேசினார். முந்தைய காலங்களில் பல, வெளிப்படைத்தன்மையற்ற வரி முறைகளை அவர் நினைவு கூர்ந்தார். ஜி.எஸ்.டி., எனப்படும் நவீன முறையையும், வருமான வரியை எளிமைப்படுத்தி, முகமில்லா மதிப்பீட்டையும் அறிமுகப்படுத்தினோம் என்றும் இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் சாதனை வரி வசூலுக்கு வழிவகுத்துள்ளன", என்றும் பிரதமர் கூறினார். பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களின் பணத்தை திருப்பி அளித்து வருகிறோம் என்று குறிப்பிட்டார். வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து  ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,  2014-ம் ஆண்டுக்குப் பிறகு வரி சீர்திருத்தங்களால் மக்களுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் வரிச் சேமிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.   நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், தங்கள் வரிப்பணம் நல்ல முறையில் பயன்படுத்தப்படுவதால் அவர்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார். "நாங்கள் மக்களிடமிருந்து எதைப் பெற்றோமோ, அதை மக்களிடம் திருப்பிக் கொடுத்தோம், இது நல்ல ஆட்சி மற்றும் ராம ராஜ்ஜியத்தின் செய்தி", என்று அவர் கூறினார்.

ராம ராஜ்ஜியத்தில் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதையும் பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டிற்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தும் திட்டங்களை நிறுத்தவும், கைவிடவும், திசை திருப்பவும் முனைந்த முந்தைய அரசை  சுட்டிக்காட்டிய பிரதமர், இதுபோன்ற போக்குகளுக்கு எதிராக எச்சரித்து, "குறைந்த செலவில், நேரத்தை வீணடிக்காமல் அதிக நன்மைகளை வழங்கும் பணிகளை நீங்கள் நிறைவு செய்வீர்கள் என்று தான் நம்புவதாகக் கூறினார்”. கடந்த 10 ஆண்டுகளில், தற்போதைய அரசு செலவை மனதில் கொண்டு திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க முக்கியத்துவம் அளித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அர்னாப் கோஸ்வாமி துளசிதாஸை மீண்டும் மேற்கோள் காட்டிய பிரதமர் திரு மோடி, ஏழைகளுக்கு ஆதரவளிக்கும், தகுதியற்றவர்களை நீக்கும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில் 10 கோடி போலி பெயர்கள் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். "தற்போது, ஒவ்வொரு பைசாவும் அதற்கு உரிமையுள்ள பயனாளியின் வங்கிக் கணக்கை சென்றடைகிறதாகவும், ஊழலுக்கு எதிரான போராட்டமும், ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கையும் அரசின் முன்னுரிமையாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசின் முயற்சிகளால் கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று நிதி ஆயோக் நேற்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கை குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு மோடி விளக்கினார். இந்த நம்பிக்கையின் நேர்மறையான முடிவுகளை நாட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் காணலாம் என்று சுட்டிக்காட்டினார். குறிப்பாக பல பத்தாண்டுகளாக வறுமையை ஒழிப்பதற்கான முழக்கங்கள் எழுப்பப்பட்ட ஒரு நாட்டில் இது ஒரு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத சாதனை என்று குறிப்பிட்டார். இது 2014-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏழைகளின் நலனுக்கான அரசின் முன்னுரிமையின் விளைவாகும் என்று கூறினார். நாட்டின் ஏழைகளுக்கு உரிய வழிவகைகள், வளங்கள் வழங்கப்பட்டால் வறுமையை தோற்கடிக்கும் திறன் உள்ளது என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். "தற்போது இது  உண்மையாகி வருவதை நாம் காணலாம்", என்றும் அவர் மேலும் கூறினார். சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் மற்றும் ஏழைகளுக்கான வசதிகளை அதிகரிப்பதற்காக அரசு செலவிடுகிறது என்று அவர் கூறினார். "ஏழைகளின் திறன் வலுப்படுத்தப்பட்டு வசதிகள் வழங்கப்பட்டபோது, அவர்கள் வறுமையில் இருந்து விடுபடத் தொடங்கினர்" என்று கூறிய அவர், ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பு இது மற்றொரு நல்ல செய்தி என்று குறிப்பிட்டார். "இந்தியாவில் வறுமையை குறைக்க முடியும், இது அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி நாட்டின் நம்பிக்கையை அதிகரிக்கும்" என்று அவர் குறிப்பிட்டார். வறுமை குறைந்ததற்கு நடுத்தர வர்க்கத்தின் எழுச்சிதான் காரணம் என்று பிரதமர் திரு மோடி பாராட்டினார். புதிய நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சியின் ஆற்றலையும், பொருளாதார நடவடிக்கைகளில் அவர்களின் பங்களிப்பையும் பொருளாதார உலகில் உள்ள மக்கள் உணர்கிறார்கள் என்று அவர் கூறினார். இத்தகைய சூழ்நிலையில், தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமி தனது பொறுப்பை இன்னும் தீவிரமாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ராமரின் வாழ்க்கையை விளக்கியதன் மூலம் செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து தாம் அழைப்பு விடுத்த அனைவருக்குமான முயற்சி என்ற முழக்கத்தை  விரிவுபடுத்திக் குறிப்பிட்டார். இராவணனுக்கு எதிரான போரில் ஸ்ரீ ராமர் வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி அவற்றை ஒரு பெரிய சக்தியாக மாற்றியதை அவர் நினைவு கூர்ந்தார். நாட்டைக் கட்டமைப்பதில் அதிகாரிகள் தங்கள் பங்களிப்பை உணர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், நாட்டின் வருமானத்தையும், முதலீட்டையும் அதிகரிக்கவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும் கூட்டு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆந்திர ஆளுநர் எஸ்.அப்துல் நசீர், ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

குடிமைப்பணி திறன் மேம்பாடு மூலம் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரத்தில் தேசிய சுங்க, மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாடமியின் புதிய அதிநவீன வளாகம் உருவாக்கப்பட்டு கட்டப்பட்டது. 500 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த அகாடமி மறைமுக வரிவிதிப்பு (சுங்கம், மத்திய கலால் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் போதைப்பொருள் தடுப்பு நிர்வாகம் ஆகிய துறைகளில் திறனை வளர்ப்பதற்கான மத்திய அரசின் தலைமை நிறுவனமாகும். தேசிய அளவிலான உலகத் தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனமான இது இந்திய வருவாய் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரிகளுக்கும், மத்திய அரசு சார்ந்த சேவைகள், மாநில அரசுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் பயிற்சியளிக்கும்.

இந்த புதிய வளாகத்தை அமைத்ததன் மூலம், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவு,  பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய தலைமுறை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் தேசிய சுங்க, மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாடமி கவனம் செலுத்தும்.

----

(Release ID: 1996697)

ANU/SM/IR/KPG/KRS



(Release ID: 1996766) Visitor Counter : 75