வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த, துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ன் ஒரு பகுதியாக இந்தியா - ஐக்கிய அரபு அமீரக வணிக உச்சி மாநாடு நடைபெற்றது

Posted On: 11 JAN 2024 11:57AM by PIB Chennai

துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியா - ஐக்கிய அரபு அமீரக வணிக உச்சி மாநாடு 2024 ஜனவரி 10 அன்று நடைபெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு   2024-ல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வளர்ந்து வரும் ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதை மேலும் வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடி, திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அன்புடன் வரவேற்றதுடன், இந்தியா - ஐக்கிய அரபு அமீரக உறவுகளை மேம்படுத்துவதற்கான அவரது எண்ணங்களையும் முயற்சிகளையும் இந்தியா போற்றுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்தியா - ஐக்கிய அரபு அமீரக வர்த்தக உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில், மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக பொருளாதார அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தகத்துறை இணையமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் ஜீயோடி ஆகியோரின் சிறப்பு உரைகளும், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர ரஜினிகாந்த் படேலின் சிறப்பு உரைகளும் இடம் பெற்றன. தொடக்க அமர்வின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் – இந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்த குழுமத்தின் வலைத்தளத்தை திரு பியூஷ் கோயல், டாக்டர் தானி பின் அகமது அல் ஜீயோடி, திரு பூபேந்திர ரஜினிகாந்த் படேல் ஆகியோர் முறைப்படி தொடங்கி வைத்தனர். இந்த அமர்வில் இந்தியாவின் வளர்ந்து வரும் புத்தொழில் வாய்ப்பை எடுத்துரைத்ததுடன், இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய புத்தொழில் தலைவர் மற்றும் ஸ்னாப்டீல், டைட்டன் கேபிடல் இணை நிறுவனர் திரு குணால் பாஹ்லின் கருத்துகளும் இடம் பெற்றன.

-----

ANU/PKV/IR/KPG/KV

 



(Release ID: 1995114) Visitor Counter : 89