தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் மத்திய அரசின் 2024-ம் ஆண்டு நாள்காட்டியை வெளியிட்டார்

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை அரசின் குறிக்கோள் - இதுவே இந்தியாவை பலவீனமான ஐந்து பொருளாதரத்தில் ஒன்றாக இருந்த நிலையிலிருந்து முதல் 5 பொருளாதாரத்திற்குள் இடம் பெறும் நிலைக்குக் கொண்டு சென்றது: திரு அனுராக் தாக்கூர்

Posted On: 30 DEC 2023 2:13PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று (30-12-2023) நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் (ஹமாரா சங்கல்ப் விக்சித் பாரத்) என்ற கருப்பொருளுடன் மத்திய அரசின் 2024-ம் ஆண்டுக்கான நாள்காட்டியை (காலண்டர்) வெளியிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் மக்களின் முன்னேற்றத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதன் மூலமும், திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலமும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறந்த, கலாச்சார மற்றும் பொருளாதார மாற்றத்தை 2024 நாள்காட்டி சித்தரிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அரசின் எண்ணற்ற சாதனைகள், அது தொடர்பான படங்கள் நாட்குறிப்பின் பக்கங்களை அலங்கரிக்கின்றன என்றார்.

 

தற்சார்பு நாடாக மாறுவதில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். மொபைல் போன் இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் இருந்த நாடு இன்று இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தடுப்பூசிகளை இறக்குமதி செய்து வந்த நாடு தற்போது தடுப்பூசி நட்புத் திட்டத்தின் கீழ் உலகம் முழுவதும் தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது என்றும் அவர் கூறினார். இந்தியா இன்று உற்பத்தி நாடாக திகழ்கிறது எனவும் இப்போது பெரிய சக்தியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  இந்தியா இன்று மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

 

பெண்களுக்கு அதிகாரமளிப்பதை அரசு முதன்மையாகக் கொண்டுள்ளது என்றும், ஒருபுறம் இலவச சமையல் எரிவாயுத் திட்டம் மறுபுறம் மகளிருக்கான ட்ரோன் திட்டம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு என்றும் திரு அனுராக் தாக்கூர் கூறினார்.

வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் அரசின் குறிக்கோள்களாகும் என்று கூறிய அவர்,  இந்த நெறிமுறைதான் ஒரு காலத்தில் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்த இந்தியாவை இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த விழுமியங்களின் உணர்வு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சிறப்பாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

 

2023-ம் ஆண்டு முடிவடையும் நிலையில், 20240ம் ஆண்டு மேலும் பல வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது என்றும் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கருப்பொருளில் ஒரு கண்காட்சியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

 

 

 

நாள்காட்டி (காலண்டர்) பற்றி

 

கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் முகத்திலும் புன்னகையை ஒவ்வொரு மாதமும் bர வைக்கிகிறது. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி, அனைவரின் நம்பிக்கை என்ற அடிப்படையில் பல அரசு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட அயராத முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது.

 

ஜனவரி:

 

புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் போது, ஆண்டின் முதல் மாதத்திற்கான 'திறனை வெளிக்கொணர்தல், இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்தல்' என்ற கருப்பொருளுடன் புத்தாக்கம் மற்றும் மீள்திறன் உணர்வைத் தழுவுகிறோம். "மேக் இன் இந்தியா" மற்றும் "மேக் ஃபார் தி வேர்ல்ட்" போன்ற முன்முயற்சிகளால் இந்தியா இணையற்ற வெற்றியை அடைந்துள்ளது. மேலும் ஜனவரி மாதத்தின் கருப்பொருள் தன்னிறைவு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட எதிர்காலத்தை நோக்கிய நமது கூட்டு முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

 

பிப்ரவரி:

 

"தேசிய வளர்ச்சிக்கான இளைஞர் சக்தி" என்ற கருப்பொருளில் பிப்ரவரி மாதம் கொண்டாடப்படும். தொழில்முனைவை ஊக்குவிப்பதில் இருந்து தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது வரை, பிப்ரவரி மாதம், இளைஞர்களின் பங்களிப்புகளை அதிகரிப்பதற்கான முயற்சியாகத் திகழும். இது நாட்டை பிரகாசமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கி நகர்த்தும்.

 

மார்ச்:

 

ஏழைகளுக்கு சேவை செய்வதும், விளிம்புநிலை மக்களை மேம்படுத்துவதும் பிரதமர் திரு நரேந்திர மோடி அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். 'வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை' என்ற கருப்பொருளைக் கொண்ட மார்ச் மாதம், நீதிக்கான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதை உறுதி செய்கிறது. தேவைப்படுபவர்களுக்கு ஆதரவை வழங்குவதில்தான் உண்மையான முன்னேற்றம் உள்ளது என்பதை இது நினைவூட்டுகிறது.

 

ஏப்ரல்:

 

சமூகத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றம் இல்லாமல், சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் இல்லை. ஏப்ரல் மாதத்தின் கருப்பொருள் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கிறது.

 

மே:

 

நமது விவசாயிகளின் சிறந்த பணியை ஊக்குவிப்பது இந்த மாதத்தின் சிறப்பம்சமாகும். விவசாய முன்னேற்றத்திற்கான கொள்கைகள், நிலையான நடைமுறைகளை ஆதரித்தல் மற்றும் நாட்டிற்கு உணவளிப்பவர்களின் நல்வாழ்வை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

 

ஜூன்:

 

பிரதமரின் ஸ்வநிதி, பிரதமர் விஸ்வகர்மா மற்றும் முத்ரா யோஜனா போன்ற பல அரசுத் திட்டங்கள் இந்தியாவில் வேலை வாய்ப்புகள், சுயதொழில் மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த மாதம், 'வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளில் வளர்ச்சி' என்ற கருப்பொருளுடன், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.

 

ஜூலை:

 

நமது சமூகத்தின் முதுகெலும்பான நடுத்தர வர்க்கத்தைக் கொண்டாடுவதே ஜூலை மாதத்தின் கருப்பொருள் ஆகும். அவர்களின் கடின உழைப்பு புதிய இந்தியாவின் உணர்வை வரையறுக்கிறது. நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை'யை உருவாக்க, அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

 

ஆகஸ்ட்:

 

ஆகஸ்ட் மாதம் உலகப் பொருளாதார அரங்கில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் போன்ற முக்கிய முன்முயற்சிகளால், இந்தியா உலகின் 3 வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

 

செப்டம்பர்:

 

அதிநவீன வசதிகளுடன் கூடிய நவீன உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் முதல் விரிவான போக்குவரத்து கட்டமைப்புகள் வரை, நாட்டின் முன்னேற்றத்திற்கான சிறந்த அடித்தளத்தை உருவாக்குவதில் கடந்த பத்து ஆண்டுகளில் நாடு அடைந்த முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் செப்டம்பர் மாத்த்தின் கருப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

 

அக்டோபர்:

 

ஆயுஷ்மான் அட்டைகள், மக்கள் மருந்தக மையங்கள் மற்றும் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் புதிய எய்ம்ஸ் மருத்துவமைனைகள் போன்ற ஆரோக்கியமான இந்தியாவின் பார்வையைக் கொண்டாட சுகாதாரத் திட்டங்கள் அக்டோபர் மாதத்தின் கருப்பொருளாக அமைகிறது.

 

நவம்பர்:

 

நமது உள்ளார்ந்த துடிப்பான கலாச்சாரத்தில் பெருமிதம் கொள்வது முதல் பல்வேறு கலை வடிவங்களை ஊக்குவித்துக் கலாச்சார பாரம்பரிய தளங்களைப் பாதுகாப்பது வரை, பல விதமான கலாச்சார அம்சங்களில் நவம்பர் மாதத்தின் கருப்பொருள் கவனம் செலுத்துகிறது.

 

டிசம்பர்:

 

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தாரக மந்திரத்தாலும், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை போன்ற முன்முயற்சிகளாலும், உலகத்தின் நண்பனான இந்தியா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளதை டிசம்பர் மாதக் கருப்பொருள் நினைவூட்டுகிறது.

 

நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நமது அர்ப்பணிப்பை தினசரி நினைவூட்டும் வகையில் இந்த நாள்காட்டி (காலண்டர்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உறுதியுடனும், ஒற்றுமையுடனும், பகிரப்பட்ட பார்வையுடனும் பணியாற்ற அனைவரையும் ஊக்குவிக்கிறது. மேலும் அனைவருக்கும் செழிப்பான மற்றும் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தைத் தொடங்க அனைத்து இந்தியர்களையும் இது ஊக்குவிக்கிறது.

Release ID: 1991727

PKV/PLM/KRS



(Release ID: 1991745) Visitor Counter : 114