உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள குருத்வாரா ஸ்ரீ படிசங்கத் சாஹிப்பில் இன்று வீர புதல்வர்கள் தினத்தை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற்றார்

प्रविष्टि तिथि: 26 DEC 2023 4:15PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, இன்று வீரப் புதல்வர்கள் தினத்தையொட்டி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள குருத்வாரா ஸ்ரீ படிசங்கத் சாஹிப்பில் ஆசி பெற்றார். வரலாற்று சிறப்புமிக்க இந்த குருத்வாராவுக்கு குருநானக் தேவ், குரு தேக் பகதூர் ஆகியோரின் ஆசீர்வாதங்கள் உள்ளன.

வீர புதல்வர்கள் தினத்தன்று சத்சங்கத்தில் கலந்து கொள்ள இங்கு வந்திருப்பது தனது அதிர்ஷ்டம் என்று  மத்திய உள்துறை அமைச்சர் சமூக ஊடக எக்ஸ் பதிவில்  தெரிவித்துள்ளார்.

தர்மத்தையும், சத்தியத்தையும் பாதுகாக்க குரு கோவிந்த் சங்ஜியின் புதல்வர்கள் சிறுவயதில் செய்த தியாகங்கள் நம் அனைவருக்கும் காலங்காலமாக உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறினார்.

***

ANU/SM/IR/AG/KPG

 


(रिलीज़ आईडी: 1990544) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Gujarati , Telugu