தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கிறது

Posted On: 22 DEC 2023 3:20PM by PIB Chennai

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை மூலம்  மத்திய அரசின் நலத்திட்டங்கள்  மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்றடைய வகை செய்யப்பட்டுள்ளது. வீட்டு வாசலில் கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ளது. யாத்திரையில் ஈடுபட்டுள்ள, விழிப்புணர்வை ஏற்படுத்தும் தகவல் மற்றும் தொடர்பு  வாகனங்கள்  சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் பிரச்சாரங்களை நடத்தி வருகின்றன. இந்த வாகனங்கள் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட  கிராமங்களுக்கு சென்றடைந்துள்ளன. 

 

இன்று (22.12.2023) பிற்பகல் 2.30 மணி  நிலவரப்படி கிட்டத்தட்ட நான்கரை கோடி  க்கள் யாத்திரையில்  பங்கேற்றுள்ளனர். 

கோடிக்கும் அதிகமான மக்கள்  வளர்ந்த இந்தியாவுக்கான உறுதிமொழியை ஏற்றுள்ளனர்.

 

இந்த யாத்திரை விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை  அதிகளவில் எடுத்துரைத்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் அசம்கரைச் சேர்ந்த விவசாயி ஜனக் யாதவ் மற்றும் பீகாரின் சஹர்சா மாவட்டத்தில் உள்ள பெலாஹி பஞ்சாயத்தைச் சேர்ந்த நசிரூதின்  ஆகியோர் மத்திய அரசின் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் மூலம் தாங்கள் மிகுந்த பயனடைந்து வருவதாக  விவரித்தனர்.

 

இந்த யாத்திரையின் மூலம் விவசாயிகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்க மத்திய அரசு அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. யாத்திரையின் போதுவிவசாய நிலங்களில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தும் செயல்விளக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த செயல் விளக்கங்கள் பெரிய அளவில்  வரும் காலத்தில் தங்களுக்கு பயனளிக்கும் என்று பல்வேறு விவசாயிகள்  கூறுகின்றனர்.

 -------------

 

(Release ID: 1989562)

ANU/SM/PLM/RS/KRS



(Release ID: 1989715) Visitor Counter : 71