நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

2023-ல் மத்திய நுகர்வோர் நலத் துறையின் சாதனைகள்

Posted On: 20 DEC 2023 5:03PM by PIB Chennai

விலைக் கண்காணிப்பு முறைகளை வலுப்படுத்தி, நுகர்வோர் உரிமைகள் குறித்து, நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்திற்கு உட்பட்ட நுகர்வோர் நலத்துறை, ஆண்டு முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.  

2023-ம் ஆண்டில் இத்துறை மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் சாதனைகள் வருமாறு

விலைக் கண்காணிப்பு நடைமுறையை வலுப்படுத்தும் நடவடிக்கை:

நாட்டின் வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள 550 சந்தைகளில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில்,   22 அத்தியாவசியப் பொருட்களின் (அரிசி, கோதுமை, கோதுமை மாவு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு, சர்க்கரை, வெல்லம், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், வனஸ்பதி, சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், பாமாயில், தேயிலை, பால், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு), மொத்தவிலை மற்றும் சில்லரை விலையைவிலை கண்காணிப்பு பிரிவு  கண்காணித்து வருகிறது.  இந்தப் பொருட்களின் விலை விவங்கள், செல்போன் செயலி வாயிலாக சேகரிக்கப்படுகிறது. 

முக்கிய சாதனைகள்

2023-ம் ஆண்டில் நுகர்வோர் நலத் துறை, 140 விலை அறிவிப்பு மையங்களைப் புதிதாக சேர்த்துதற்போது மொத்தம் 550 மையங்களாக அதிகரித்துள்ளது.  

விலைக் கண்காணிப்புப் பிரிவை வலுப்படுத்த, 2023-ம் ஆண்டில் 8 விதிமுறைகள்/கட்டுப்பாடுகள்/வழிகாட்டிகள் அறிவிக்கப்பட்டன.

விலைக் கண்காணிப்பு  நடைமுறையை வலுப்படுத்த, இந்த ஆண்டில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,23,68,711/- வழங்கப்பட்டுள்ளது.

விலை முன்னறிவிப்புக்கான மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. 

விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க விலை நிலைப்படுத்துதல் நிதியம்:

தோட்டக்கலை விளைபொருட்களான வெங்காயம், உருளைக் கிழங்கு மற்றும் பருப்பு வகைகளின் விலை, அடிக்கடி ஏற்றத்தாழ்வை சந்திக்கின்றன.  பொதுவாக, அறுவடை நேரத்திலும், அதனைஒட்டிய காலத்திலும், இவற்றின் விலை  பெரும் சரிவை சந்திக்கிறது.  சேமித்து வைக்கப்படும் பொருட்களின் கையிருப்பு குறையும்போது, விலை அதிகரிக்கிறது.  இதுபோன்ற விலைவாசி ஏற்ற இறக்கங்களும், அசாதாரண விலை உயர்வுகளும் நுகர்வோரைப் பெரிதும் பாதிக்கிறது. 

உலக நுகர்வோர் உரிமை தினக் கொண்டாட்டம்:

உலக நுகர்வோர் உரிமை தினம், தில்லியில் உள்ள வனிஜ்ய பவனில், 15.3.2023 அன்று கொண்டாடப்பட்டது.   “தூய்மை எரிசக்தி மாற்றம் மூலம் நுகர்வோருக்கு அதிகாரமளித்தல்என்பதே, இந்த நிகழ்ச்சியின் மையக் கருத்து.   மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் தலைமையில், இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.   

2023-ல் அறிவிக்கப்பட்ட விதிகள்/ கட்டுப்பாடுகள்/வழிகாட்டி நெறிமுறைகள்:

தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் குரூப் ஏ, பி பதவிகள் மற்றும் பதிவாளர் தேர்வுக்கான விதிமுறைகள், பிற அதிகாரிகள், பணியாளர் சேவை விதிமுறைகள், நுகர்வோர் பாதுகாப்பு (நேரடி விற்பனை) சட்டத்திருத்தம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள. 

மின்னணு முறையில் மனு தாக்கல்:  

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் கீழ், நுகர்வோர் ஆணையத்திடம் இணையதள வாயிலாக விண்ணப்பிப்பதற்குedaakhil.nic.in  என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு, வழக்குகளுக்கு விரைவாகவும், நேர்த்தியாகவும் தீர்வு காணப்பட்டு வருகிறது.  இதன்படி, வழக்குத் தொடர்வதற்கான கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்துவதுடன், மேல்முறையீடுகளையும்  E-Dakhil வாயிலாக தாக்கல் செய்யலாம்.  தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் மற்றும் லடாக் தவிர, 35 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில்  இந்த இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.                

வழக்குகளுக்குத் தீர்வு:

நுகர்வோர் நலத் துறையால் நடத்தப்பட்ட மண்டல அளவிலான கருத்தரங்குகள், மாநிலம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் 100% -க்கும் மேலாகவே வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது.  

தேசிய நுகர்வோர் உதவி எண் மாற்றம்:

தேசிய நுகர்வோர் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ள, 1915 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்,  17 மொழிகளில்  பயன்பாட்டிற்கு வந்துள்ளது.    

தர நிர்ணயம்:

ஏப்ரல் 2023 – நவம்பர் 2023வரை, 1320 தர நிர்ணய விதிகள் (புதிதாக 455 மற்றும் 865 மாற்றியமைக்கப்பட்டவை) உருவாக்கப்பட்டதுடன், 2118 தர நிர்ணய விதிகள் மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  தற்போதைய நிலையில், 22,320 தர நிர்ணய விதிமுறைகள்  பயன்பாட்டில் இருப்பதுடன், இந்தியாவின் 8500 தர நிர்ணய முறைகள்ஐஎஸ்ஓ/ஐஇசி  தர நிர்ணய விதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள. 

ஹால்மார்க் முத்திரை:

1 ஏப்ரல் 2023 முதல் 25 நவம்பர் 2023 வரை, ஹால்மார்க் பதிவுபெற 1,84,296 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, 1409 பொருட்களுக்கு பிஐஎஸ் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.   10.39 கோடி தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்/கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது. 

சட்ட ரீதியான அளவியல் முறை:

சட்ட ரீதியான அளவியல் தொடர்பான சேவைகள் அனைத்தும், இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் மேற்கொள்ளப்படுகிறது.  இவை, வர்த்தகத்தை எளிதாக்கி, இணக்க சுமையைக் குறைக்க உதவும். 

நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் விதமாக, மின்னணு வர்த்தகத் தளங்களில் விற்கப்படும் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் அவை தயாராகும் நாடு அல்லது இறக்குமதி செய்யப்படும் நாட்டின் பெயர் இடம்பெறுவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

************

SMB/MM/KV
 



(Release ID: 1989529) Visitor Counter : 95