மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
2023-ல் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் சாதனைகள்
Posted On:
20 DEC 2023 2:41PM by PIB Chennai
கால்நடை வளர்ப்பு
2014-15-ல் 13.36 சதவீதமாக இருந்த மொத்த வருடாந்திர கால்நடை வளர்ப்பு 2021-22ல் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த தொழில்துறையில், கால்நடைகளின் பங்களிப்பு 24.38 சதவீதத்திலிருந்து (2014-15) 30.19 சதவீதமாக (2021-22) அதிகரித்துள்ளது.
கால்நடைகளின் எண்ணிக்கை
20-வது கால்நடை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 303.76 மில்லியன் கால்நடைகள் (ஆடு,மாடுகள், வெள்ளைப் பன்றி மற்றும் காட்டெருமை) உள்ளன. இவற்றில் 74.26 மில்லியன் செம்மறியாடு, 148.88 மில்லியன் வெள்ளாடுகள், 9.06 மில்லியன் வெள்ளைப் பன்றிகள், சுமார் 851.81 மில்லியன் கோழிகள்.
பால்வளத்துறை
பால்வளத்துறை, நாட்டின் பொருளாதாரத்தில் 5 சதவீத பங்களிப்பை வழங்கும் தனிப்பெரும் வேளாண் சாதனமாக உள்ளதுடன், 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
உலகின் மொத்தப் பால் உற்பத்தியில், 24.64 சதவீதம் உற்பத்தி செய்து, இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2022-ம் ஆண்டில் உலக சராசரியாக, நாளொன்றுக்கு ஒரு தனி நபர் பயன்படுத்தும் பாலின் அளவு 322 கிராம் என்ற அளவில் உள்ள நிலையில், இந்தியாவில் அது நாளொன்றுக்கு 459 கிராம் என்ற அளவில் உள்ளது.
பால்வள மேம்பாட்டுக்கான தேசிய திட்டத்தின்கீழ், கிராமங்களிலுள்ள பால் சேகரிப்பு மையங்களில், 84.4லட்சம் லிட்டர் குளிரூட்டும் திறன் கொண்ட, 3864 பால் குளிரூட்டும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி
உலக அளவில், முட்டை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் 5-வது இடத்திலும் உள்ளது. நாட்டின் முட்டை உற்பத்தி 78.48 பில்லியனிலிருந்து (2014-15) 138.38 பில்லியனாக (2022-23) அதிகரித்துள்ளது. 2014-15-ல் ஒரு தனி நபருக்கு ஆண்டுக்கு 62 முட்டைகள் கிடைத்த நிலையில், 2022-23-ல் 101முட்டைகளாக அதிகரித்துள்ளது. இறைச்சி உற்பத்தியும் 2014-15-ல் 6.69 மில்லியன் டன்களாக இருந்த நிலையில், 2022-23-ல் 9.77 மிலலியன் டன்களாக அதிகரித்துள்ளது.
கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் திட்டங்கள்
ராஷ்ட்ரிய கோகுல இயக்கம்: உள்நாட்டுப் பசுமாடு கன்றுகளைப் பாதுகாத்து, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய செயற்கைக் கருவூட்டல் திட்டம் : ராஷ்ட்ரிய கோகுல இயக்கத்தின்கீழ், 6.21கோடி கால்நடைகளுக்கு, 7.96 கோடி செயற்கை கருத்தரிப்பு செய்யப்பட்டதன் மூலம், 4.118 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
நாட்டில் செயற்கைக் கருத்தரிப்பு தொழில்நுட்பம் ஊக்குவிப்பு: இத்திட்டத்தின்கீழ், தற்போதைய நிலையில், 19,124 கன்று ஈனக்கூடிய கருமுட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 10,331 கருமுட்டைகள் செலுத்துப்பட்டு, 1,621 கன்றுக்குட்டிகள் ஈன்றுள்ளன.
தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம் : கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை, தேசிய பால் அபிவிருத்தி வாரியத்தின் மூலம், “தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தை” தொடங்கியுள்ளது. இது, நாட்டில் கால்நடை உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதுடன், கால்நடைகள் மற்றும் மனிதர்களை பாதிக்கக் கூடிய நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில், தரமான கால்நடைகள் கிடைப்பதை உறுதி செய்யும்.
கன்று வளர்ப்புப் பண்ணைகள் : இத்திட்டத்தின்கீழ், கன்றுக்குட்டி அபிவிருத்திப் பண்ணைகளை அமைக்க, தனியார் தொழில் முனைவோருக்கு, மூலதன செலவாக (நிலத்தின் விலை உட்பட) 50% மான்யம் (ஒரு பண்ணைக்கு ரூ.2 கோடி வரை) வழங்கப்படுகிறது. தற்போது வரை, 111 கன்றுக்குட்டி அபிவிருத்திப் பண்ணைகளை அமைக்க, துறையின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்திக்கான தேசிய திட்டம்: பால் உற்பத்தியை அதிகரிக்க, 2014 முதல் பால் உற்பத்திக்கான தேசியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், திட்டமிட்டக் கொள்முதல், பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் பங்கை அதிகரிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் ரூ. 3311.10 கோடி (மத்திய அரசின் பங்கு ரூ.2479.06 கோடி) மதிப்பீட்டிலான 195 திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 30.11.2023 வரை இத்திட்டத்தை செயல்படுத்த, ரூ.1,824.60 கோடி விடுவிக்கப்பட்டு, ரூ.1,429.62 கோடி செலவிடப்பட்டுள்ளது.
சாதனைகள்
பால்வளக் கூட்டுறவு சங்கங்களில் 15.82 லட்சம் புதிய விவசாயிகள் உறுப்பினராக சேர்க்கப்பட்டு, 57.31 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
82 பால் பதனிடும் நிலையங்கள் வலுப்படுத்தப்பட்டு, ஒரு நாளைக்கு, 22.30 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக / புதிதாகப் பதப்படுத்தும் திறன் உருவாக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பால்வளக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ஆதரவு
(30.11.2023 வரையிலான முன்னேற்றம்/சாதனைகள்)
வட்டி தள்ளுபடிக்காக 2% வீதம் மொத்தம் ரூ. 619.42 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள்/உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளால் செயல் மூலதனமாகப் பெறப்பட்ட கடன் தொகை ரூ. 47183.76 கோடி.
இதுவரை விடுவிக்கப்பட்ட வட்டி தள்ளுபடி தொகை : ரூ. 453.74 கோடி
இது தவிர, பால் பதப்படுத்துதல் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும், இத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு 29.87 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயக் கடன் அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன.
*************
SMB/MM/KV
(Release ID: 1989068)
Visitor Counter : 228