சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பிரதமர் திரு மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றது: திரு பூபேந்தர் யாதவ்

Posted On: 19 DEC 2023 1:25PM by PIB Chennai

பிரதமர்  திரு மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறினார். பருவநிலை நடவடிக்கை, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் அதன் தலைமையை உலகம் அங்கீகரித்துள்ளது என்றும் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

உலகளவில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு யாதவ், "இந்தியா ரூ .615 கோடி மட்டுமே செலவழித்து வெற்றிகரமாக நிலவை அடைந்தது என்றும், நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா தான் என்றும் குறிப்பிட்டார். சந்திரயான் 3 உடனான இந்தியாவின் விண்வெளி பயணத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று தற்சார்பின் முக்கியத்துவம் ஆகும். இந்தியாவின் தொடக்க காலத் திட்டங்கள் சர்வதேச கூட்டாண்மையைச் சார்ந்திருந்தாலும், சந்திரயான் -3 தன்னிறைவை நோக்கிய ஒரு படியாகும் என்று அவர் கூறினார். 

"திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையால் இது சாத்தியமாகியுள்ளது" என்று திரு யாதவ் கூறினார்.

 

கொவிட் தொற்றுநோயை இந்தியா எதிர்கொண்ட விதம் குறித்துப் பேசிய அவர்,   "கொவிட் தொற்றுநோய் தாக்கியபோது, இந்தியா வீழ்ச்சியடையும் என்று உலக நாடுகள் நினைத்தது என்றும், ஆனால் அதற்கு மாறாக  இந்தியா வீழ்ச்சியடையாமல், கொவிட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் உலகிற்கு முன்னுதாரணமாக மாறியது என்று தெரிவித்தார். இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை மட்டுமல்ல, உலகின் மிக விரைவான தடுப்பூசி இயக்கத்தையும் மேற்கொண்டது என்று அவர் கூறினார். தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதுடன், தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகளுக்கும் இந்தியா உதவியது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் கொவிட் தடுப்பூசி மைத்ரி திட்டம் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உதவியுள்ளது என்றும் திரு பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1988095

***

ANU/PKV/IR/AG/KV

 



(Release ID: 1988579) Visitor Counter : 38