பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் பிரதமர் பங்கேற்பு
"பயனாளிகள் அரசாங்கத்தைத் தேடி ஓட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக பயனாளிகளை அரசு சென்றடைய வேண்டும்"
"வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான லட்சிய யாத்திரை எனக்கு ஒரு பரிசோதனை. எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ளதா என்பதை மக்களிடம் கேட்க விரும்புகிறேன்"
"வெற்றிகரமான திட்டங்கள் குடிமக்களிடையே உரிமை உணர்வை உருவாக்குகின்றன"
"வளர்ச்சியடைந்த இந்தியாவின் விதைகள் விதைக்கப்பட்டால், அடுத்த 25 ஆண்டுகளின் பலன் நமது எதிர்கால சந்ததியினரால் அறுவடை செய்யப்படும்"
"வளர்ச்சியடைந்த இந்தியா, எல்லா சிரமங்களிலிருந்தும் விடுபடுவதற்கான வழி"
Posted On:
17 DEC 2023 6:03PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் பங்கேற்றார். கண்காட்சி அரங்குகள் வழியாக நடைபயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த இந்தியா யாத்திரை வனம் மற்றும் விநாடி வினா நிகழ்ச்சியைப் பார்வையிட்டார். மேலும், அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான லட்சிய உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்தியா முழுவதும் அந்தந்த தொகுதிகளில் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றதாகக் கூறிய அவர், வாரணாசியில் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் நகரத்தின் 'சேவகராகவும்' பங்கேற்பதாகக் கூறினார். அரசுத் திட்டங்களை உரிய காலத்தில், இடையூறில்லாமல் உரிய பயனாளிகளுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, "பயனாளிகள் அரசாங்கத்தைச் தேடி ஓட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக பயனாளிகளை அரசு சென்றடைய வேண்டும்" என்றார்.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 4 கோடி குடும்பங்களுக்கு முழுவசதியுடன் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த திரு. மோடி, எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், பின்தங்கிய மக்களைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். "வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரை எனக்கு ஒரு பரிசோதனை" என்று கூறிய பிரதமர், விரும்பிய முடிவுகளை அடைந்துள்ளதா என்பதை மக்களிடமிருந்து கேட்க விரும்புகிறேன் என்றார். சிறிது நேரத்திற்கு முன் பயனாளிகளுடனான தனது உரையாடலை நினைவுகூர்ந்த பிரதமர், ஆயுஷ்மான் பாரத், ஆயுஷ்மான் அட்டை போன்ற திட்டங்களின் நன்மைகளை எடுத்துரைத்தார். அரசின் திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகள் மீது நேர்மறையான பணிகளின் தாக்கத்தை எடுத்துரைத்த திரு. மோடி, இது அவர்களுக்கு புதிய உற்சாகத்தையும் மனநிறைவையும் அளிக்கிறது என்றார். "அரசு திட்டங்களை களத்தில் செயல்படுத்துவதன் தாக்கம் அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியின் புதிய பரிமாணத்தைத் திறக்கிறது, மேலும் இது வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரை மூலம் சாத்தியமாகிறது" என்று பிரதமர் கூறினார்.
வெற்றிகரமான திட்டங்கள் குடிமக்களிடையே உரிமை உணர்வை உருவாக்குகின்றன என்று பிரதமர் மோடி கூறினார். கடன் மற்றும் பிற வசதிகளைப் பெறும் ஒருவர் இது தனது நாடு, தனது ரயில்வே, தனது அலுவலகம், தனது மருத்துவமனை என்று உணர்கிறார். இந்த உரிமை உணர்வு எழும்போது, தேசத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எழுகிறது; இதன் மூலம் வரும் சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஏற்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, நாட்டில் தொடங்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் சுதந்திர இந்தியாவை அடைவதற்கான பொதுவான குறிக்கோளுக்காக இருந்தது. "ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வழியில் சுதந்திரத்திற்குப் பங்களித்து வருகிறார்கள்" என்று கூறிய பிரதமர், இது ஓர் ஒற்றுமையான சூழலை உருவாக்கியது, இது இறுதியில் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேற வழிவகுத்தது என்றார். என்று பிரதமர் மோடி கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதிப்பாட்டை நிறைவேற்றவும், ஒவ்வொரு தனிநபரையும் மதித்து தேசத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லவும் இதே போன்ற தொலைநோக்குப் பார்வையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். "வளர்ச்சியடைந்த இந்தியாவின் விதைகள் விதைக்கப்பட்டால், அதன் விளைவை அடுத்த 25 ஆண்டுகளில் நமது எதிர்கால சந்ததியினர் அறுவடை செய்வார்கள்" என்று அவர் கூறினார், "ஒவ்வொரு இந்தியருக்கும் இன்று இந்த மனநிலையும் உறுதியும் தேவை." என்று அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரை ஒரு தேசிய முயற்சி, இது எந்த ஒரு அரசியல் கட்சியின் பணியும் அல்ல, ஒரு புனிதமான கடமை என்று அவர் கூறினார். இதில் மக்கள் நேரடியாகப் பங்கேற்க வேண்டும். "ஒருவர் அதைப் பற்றி செய்தித்தாள்களில் படிப்பதன் மூலம் திருப்தியடைந்தால், அவர் முக்கியமான ஒன்றை உணர்கிறார்", என்று பிரதமர் கூறினார். யாத்திரையின் பல்வேறு அம்சங்களில் கலந்து கொள்ள முடிந்ததில் அவர் தனிப்பட்ட திருப்தியை வெளிப்படுத்தினார்.
'நேர்மறையான சூழல் உருவாகும்' என்பதால், யாத்திரை குறித்த செய்தியைப் பயனாளிகள் மற்றும் குடிமக்கள் தீவிரமாகப் பரப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரை ஒரு மகத்தான தீர்மானம் என்று அழைத்த பிரதமர், 'அனைவரின் முயற்சி' மூலம் அதை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார். நிதி ரீதியாக வலுவான, ஒரு வளர்ச்சியடைந்த இந்தியா அதன் குடிமக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்று அவர் கூறினார். "அனைத்து சிரமங்களிலிருந்தும் விடுபடுவதற்கான பாதை வளர்ச்சியடைந்த இந்தியா தீர்மானத்தின் மூலம் செல்கிறது. உங்கள் பிரதிநிதியாகவும், நீங்கள் வழங்கிய தேசிய பொறுப்பிற்காகவும், நான் எந்த முயற்சியையும் கைவிட மாட்டேன் என்று காசி மக்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று கூறி அவர் உரையை நிறைவு செய்தார்.
பிரதமரின் நிகழ்வில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.
*******
ANU/PKV/SMB/DL
(Release ID: 1987512)
Visitor Counter : 88
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam