பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் தியாக தினத்தை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் வணக்கம் செலுத்தினார்
प्रविष्टि तिथि:
17 DEC 2023 1:24PM by PIB Chennai
ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் தியாக தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார். சுதந்திரம் மற்றும் மனித கண்ணியத்திற்கான ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் இணையற்றத் தியாகம் காலந்தோறும் எதிரொலிக்கிறது, இது மனிதகுலத்தை நேர்மையுடனும் இரக்கத்துடனும் வாழ ஊக்குவிக்கிறது என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இன்று, தைரியம் மற்றும் வலிமையின் கலங்கரை விளக்கமான ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் தியாகத்தை நாம் நினைவுகூர்கிறோம். சுதந்திரம் மற்றும் மனித கண்ணியத்திற்கான அவரது இணையற்ற தியாகம் காலந்தோறும் எதிரொலிக்கிறது, இது மனிதகுலத்தை நேர்மையுடனும் இரக்கத்துடனும் வாழ ஊக்குவிக்கிறது. ஒற்றுமையையும், நீதியையும் வலியுறுத்தும் அவரது போதனைகள், சகோதரத்துவம் மற்றும் அமைதிக்கான நமது தேடலில் நம்மை வழிநடத்துகின்றன. "
*******
ANU/PKV/SMB/DL
(रिलीज़ आईडी: 1987418)
आगंतुक पटल : 121
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu