பிரதமர் அலுவலகம்
காசி தமிழ் சங்கமம் இந்தியாவின் ஒற்றுமைக்கும், பன்முகத்தன்மைக்கும் சான்றாகத் திகழ்கிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
14 DEC 2023 9:35PM by PIB Chennai
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு சான்றாக காசி தமிழ் சங்கமம் திகழ்வதாகவும், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை இது வலுப்படுத்துவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வளமான கலாச்சாரங்களைக் கொண்டாடும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மக்களை வரவேற்க காசி மீண்டும் தயாராகி வருகிறது என்று திரு நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம் 2023 டிசம்பர் 17 முதல் 30 வரை வாரணாசியில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான சமூத ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவிற்குப் பதில் அளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"காசி மீண்டும் ஒருமுறை பழமையான கலாச்சாரங்களின் கொண்டாட்டமான காசி தமிழ்ச் சங்கமத்திற்கு ( @KTSangamam ) மக்களை உற்சாகமாக வரவேற்கத் தயாராகிறது. இந்நிகழ்வு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒரு சான்றாக உள்ளதுடன் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' உணர்வை வலுப்படுத்துகிறது."
*******
ANU/PKV/PLM/DL
(रिलीज़ आईडी: 1987128)
आगंतुक पटल : 103
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam