உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்காக மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 16 DEC 2023 12:33PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அமைச்சரவை எடுத்த முடிவுக்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"சூரத் அதன் பளபளக்கும் வைரங்களுக்காக மட்டுமல்லாமல், அதன் மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் துடிப்பான பாரம்பரியத்திற்காகவும் பயணிகளுக்கு ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது. சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயர்த்துவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கதவுகளைத் திறக்கும். மேலும் வெளிநாட்டு வர்த்தகத்தையும் மேம்படுத்தும். இதை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க அமைச்சரவை முடிவு செய்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

*******


ANU/PLM/PKV/DL


(रिलीज़ आईडी: 1987095) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu , Kannada