பிரதமர் அலுவலகம்
கேந்திரிய வித்யாலயாவின் வைர விழாவை முன்னிட்டு மாணவர்கள், ஊழியர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன: பிரதமர்
प्रविष्टि तिथि:
15 DEC 2023 4:18PM by PIB Chennai
கேந்திரிய வித்யாலயாவின் வைர விழாவை முன்னிட்டு அதன் மாணவர்கள், ஊழியர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"கேந்திரிய வித்யாலயா குடும்பத்தின் வைர விழாவை முன்னிட்டு அங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் அனைத்து ஊழியர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! இந்த மதிப்பிற்குரிய கல்விச் சமூகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும். பல ஆண்டுகளாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பல மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், முழுமையான வளர்ச்சிக்கும் கேந்திர வித்யாலயாவின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது”.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1986686
***
(Release ID: 1986686)
ANU/PKV/BS/RR/KRS
(रिलीज़ आईडी: 1986777)
आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam