தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கவன ஈர்ப்பு: யாத்திரை முன்னேறிச் சென்று வரும் நிலையில் விவசாயிகளுக்கு உகந்த ட்ரோன்கள் எவ்வாறு ஆயிரக்கணக்கானவர்களை ஈர்க்கின்றன

Posted On: 12 DEC 2023 2:32PM by PIB Chennai

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய  யாத்திரையை (வி.பி.எஸ்.ஒய்) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அரசின் நலத் திட்டங்களை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான நாடு தழுவிய முன்முயற்சியாகத் தொடங்கப்பட்ட இந்த திட்டம், இப்போது புதுமையான திருப்பத்தை அடைந்து, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் உருமாற்ற சக்தியாக மாறியுள்ளது.

2.60 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 4,000 க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு மகத்தான மக்கள் தொடர்பு திட்டமான வி.பி.எஸ்.ஒய், முன்னேற்றம் மற்றும் ஒருங்கிணைப்பின் அடையாளமாக மாறியுள்ளது.

நாட்டின் அனைத்து மூலைகளிலும், ட்ரோன் செயல் விளக்கங்கள் விவசாய சமூகத்தினரிடம், குறிப்பாக பெண் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கேரளா முதல் இமாச்சலப் பிரதேசம் வரை, குஜராத் முதல் திரிபுரா வரை ட்ரோன்கள் விவசாயத்தில் நேர்மறையான மாற்றத்திற்கு ஒரு ஊக்கியாகும் என்ற செய்தி தெளிவாக வெளிப்பட்டது.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை உறுதி செய்வதே பிரதமரின் தொடர் முயற்சியாக இருந்து வருகிறது. இந்த திசையில் மற்றொரு படியாக, பிரதமர், பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தை தொடங்கி வைத்தார்.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருப்பவர் திருமதி கோம்லபதி வெங்கட ரவ்னம்மா. வெறும் 12 நாட்களில் விவசாய நோக்கங்களுக்காக ட்ரோன் பறக்கும் திறனைப் பெற்ற அவர், நவம்பர் 30 அன்று காணொலி காட்சி மூலம் பிரதமருடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கிராமங்களில் விவசாய நோக்கங்களுக்காக ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் தாக்கங்கள் குறித்து பிரதமர் விசாரித்தபோது, இது நீர் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது, அதே நேரத்தில் நேர செயல்திறனை மேம்படுத்துகிறது என்று அவர் உறுதிப்படுத்தினார்.

இந்தியாவின் மகளிர் அதிகாரத்தின் சக்தியை சந்தேகிப்பவர்களுக்கு திருமதி வெங்கடா போன்ற பெண்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில், விவசாயத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் அடையாளமாக மாறும் என்றும் அவர் கூறினார். மேலும், வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையில் பெண்களின் பங்கேற்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 

***

 

ANU/SM/BS/RR/KPG



(Release ID: 1985541) Visitor Counter : 72