சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கற்பிதமும், உண்மைகளும்

கருத்தடை மருந்துகள் வாங்குவதில் தோல்வி ஏற்பட்டதாகக் கூறப்படும் ஊடகச் செய்திகள் தவறான தகவல் மற்றும் தவறாக வழிநடத்துபவை

Posted On: 12 DEC 2023 10:06AM by PIB Chennai

நாட்டின் மத்திய கொள்முதல் நிறுவனமான மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் (சி.எம்.எஸ்.எஸ்) கருத்தடை மருந்துகளைக் கொள்முதல் செய்வதில் தோல்வியடைந்ததால் இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இத்தகைய செய்திகள்  தவறான தகவல்களைத் தருகின்றன.

புதுதில்லியில் உள்ள மத்திய மருத்துவ சேவைகள் சங்கம், ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்தியக் கொள்முதல் நிறுவனம், தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டம் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக கருத்தடைக்கான ஆணுறைகளை (காண்டம்) கொள்முதல் செய்கிறது.

2023 மே மாதத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக 5.88 கோடி காண்டம்களை சி.எம்.எஸ்.எஸ் கொள்முதல் செய்தது. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான எண்ணிக்கையில் காண்டம்  கையிருப்பில்  உள்ளது.

தற்போது, என்ஏசிஓ 75% இலவச காண்டம்களை எச்.எல்.எல் லைஃப்கேர் நிறுவனத்திடமிருந்து பெறுகிறது. மேலும் சமீபத்திய ஒப்புதல்களின் அடிப்படையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மீதமுள்ள 25% கொள்முதலை முன்னெடுப்பதற்கான பணிகள் தயாராகி வருகின்றன. எச்.எல்.எல் லைஃப்கேர் நிறுவனத்திடமிருந்து ஆர்டர் செய்யப்பட்ட 66 மில்லியன் காண்டம்கள் மூலம் என்..சி.ஓவின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஒரு வருட தேவைகளுக்கான முன்பதிவு ஆர்டர்கள் தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் எச்.எல்.எல் லைஃப்கேர் நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது. சி.எம்.எஸ்.எஸ். கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டதாக எந்த நிகழ்வும் இல்லை.

நடப்பு நிதியாண்டில் பல்வேறு வகையான காண்டம்கள் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை சி.எம்.எஸ்.எஸ் ஏற்கனவே வெளியிட்டுள்ளது, மேலும் இந்த டெண்டர்கள் இறுதி கட்டத்தில் உள்ளன.

மத்திய சுகாதார அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதால் கவலைப்பட தேவையில்லை என்றும், அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களுக்காக சி.எம்.எஸ்.எஸ் கொள்முதல் செய்யும் பல்வேறு மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களின் டெண்டர் செயல்முறை மற்றும் விநியோக நிலையை கண்காணிக்க அமைச்சகத்தில் வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

***

(Release ID: 1985268)

SMB/BS/RR



(Release ID: 1985306) Visitor Counter : 63