பிரதமர் அலுவலகம்
370-வது பிரிவை ரத்து செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர்
ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் வளர்ச்சிக்கும் பிரதமர் உறுதி
प्रविष्टि तिथि:
11 DEC 2023 12:48PM by PIB Chennai
370-வது பிரிவை ரத்து செய்தது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், 2019 ஆகஸ்ட் 5- அன்று நாடாளுமன்றம் மேற்கொண்ட முடிவை அரசியலமைப்பு ரீதியாக இது நிலை நாட்டுவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்துப் போற்றும் ஒற்றுமையின் அம்சத்தை நீதிமன்றம் அதன் திறன்மிக்க ஞானத்தால் வலுப்படுத்தியுள்ளது என்றும் திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"370 வது பிரிவை ரத்து செய்தது குறித்த இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, 2019 ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றம் மேற்கொண்ட முடிவை இது அரசியலமைப்பு ரீதியாக நிலைநாட்டுகிறது;
இது ஜம்மு காஷ்மீர், லடாக்கில் உள்ள நமது சகோதரிகள், சகோதரர்களுக்கு நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் மகத்தான பிரகடனமாகும். இந்தியர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்துப் போற்றும் ஒற்றுமையின் அம்சத்தை நீதிமன்றம் தனது திறன்மிக்க ஞானத்தால் வலுப்படுத்தியுள்ளது.
உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்று ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். முன்னேற்றத்தின் பலன்கள் உங்களைச் சென்றடைவது மட்டுமல்லாமல், 370-வது பிரிவால் பாதிக்கப்பட்ட நமது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலை பிரிவினருக்கு அவர்களின் நன்மைகளை விரிவுபடுத்துவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 370-வது சட்டப்பிரிவின் கொடுமையை அனுபவித்த எவரும் இந்த உரிமையை இழக்க அனுமதிக்கக்கூடாது.
இன்றையத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலுவான, மிகவும் ஒற்றுமையான இந்தியாவை உருவாக்குவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகவும் உள்ளது. #NayaJammuKashmir"
.
***
ANU/SMB/IR/RS/KPG
(रिलीज़ आईडी: 1985014)
आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Kannada
,
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam