பிரதமர் அலுவலகம்

'மோடியின் உத்தரவாத வாகனம்' காஷ்மீரில் மங்களகரமான சடங்குகளுடன் வரவேற்பு


ஜம்மு-காஷ்மீரின் ஷேக் புராவைச் சேர்ந்த வி.பி.எஸ்.ஒய் பயனாளியான பால் விற்பனையாளர் திருமதி நதியா நசீருடன் பிரதமர் கலந்துரையாடினார்

"ஜம்மு-காஷ்மீரில் வி.பி.எஸ்.ஒய்-க்கான உற்சாகம் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புகிறது: பிரதமர்"

Posted On: 09 DEC 2023 2:47PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை (வி.பி.எஸ்.ஒய்) பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து இலக்கு பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் அரசின் முக்கிய திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தும் வகையில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் ஷேக் புராவைச் சேர்ந்த பால் விற்பனையாளரும் வி.பி.எஸ்.ஒய் பயனாளியுமான திருமதி நதியா நசீருடன் உரையாடிய பிரதமர், அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டறிந்தார். தனது கணவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்றும், அவரது இரண்டு குழந்தைகளும் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி பெறுகிறார்கள் என்றும் அவர் பதிலளித்தார்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தனது கிராமத்தில்  தற்போது நிலவும் வெளிப்படையான மாற்றங்கள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்த நதியா, ஜல் ஜீவன் மிஷன் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, ஒரு காலத்தில் தண்ணீர் பிரச்சினை நிலவிய தங்கள் வீடுகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குழாய் நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்புகளின் நன்மைகள், அரசு பள்ளிகளில் கல்வி மற்றும் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டதற்காகவும் அவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

அவரது கிராமத்தில் வி.பி.எஸ்.ஒய் வேனின் அனுபவம் மற்றும் தாக்கம் குறித்தும் திரு மோடி கேட்டறிந்தார். காஷ்மீர் கலாச்சாரத்திற்கு ஏற்ப சுப நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்படும் சடங்குகள் மூலம் மக்கள் அதை வரவேற்றனர் என்று அவர் பதிலளித்தார்.

நதியா நசீருடன் உரையாடியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அரசாங்கத்தின் சலுகைகளைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து, நாட்டின் வளர்ச்சி நோக்கத்துடன் முன்னேறி வரும் காஷ்மீரின் பெண்கள் சக்தி மீது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"உங்கள் உற்சாகம் எனக்கு ஒரு பலம்" என்று கூறிய அவர், ஜம்மு-காஷ்மீரில் வி.பி.எஸ்.ஒய்-க்கான உற்சாகம் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புகிறது என்று குறிப்பிட்டார். இது புதிய தலைமுறையினரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் என்று அவர் மேலும் கூறினார். நாடு முழுவதிலுமிருந்து மக்கள் வளர்ச்சியில் இணைவது குறித்து திருப்தி தெரிவித்த அவர், ஜம்மு-காஷ்மீர் மக்களின் பங்களிப்புகளைப் பாராட்டினார்.

----------


ANU/PKV/BS/DL



(Release ID: 1984470) Visitor Counter : 29