மத்திய அமைச்சரவை

பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 29 NOV 2023 2:27PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். 16-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள், அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், 2026, ஏப்ரல் 1 முதல் ஐந்து (5) ஆண்டு காலத்திற்கு பொருந்தும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 280(1) பிரிவின்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வரிகளின் நிகர வருவாயைப் பகிர்ந்தளிப்பது, அந்த வருவாயில் அந்தந்த மாநிலங்களுக்கு இடையே பங்கீடு செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய நிதிக் குழுவை அமைப்பதற்கான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

பதினைந்தாவது நிதிக்குழு 2017, நவம்பர் 27 அன்று அமைக்கப்பட்டது. பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2025-26 நிதியாண்டு வரை செல்லுபடியாகும்.

பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகள்:

நிதிக்குழு பின்வரும் அம்சங்கள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும்.

1.    அரசியலமைப்புச் சட்டத்தின் அத்தியாயம் 1, பகுதி 12-ன் கீழ் பிரிக்கப்பட வேண்டிய வரிகளின் நிகர வருவாயை மத்திய அரசுகளுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே பகிர்ந்தளித்தல் மற்றும் அத்தகைய வருவாயில் அந்தந்தப் பங்குகளில் மாநிலங்களுக்கு இடையே ஒதுக்கீடு செய்தல்;

இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து மாநிலங்களின் வருவாயை

2.    மானியமாக வழங்குவது மற்றும் அரசியலமைப்பின் 275 வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு அவர்களின் வருவாயின் உதவி மானியமாக வழங்கப்பட வேண்டிய தொகை ஆகியவற்றை அந்த சட்டப்பிரிவு (1) இன் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர வேறு நோக்கங்களுக்காக நிர்வகிக்க வேண்டிய கொள்கைகள்; மற்றும்

3.    மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் நிதி ஆதாரங்களை நிரப்பும் வகையில் மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள்.

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 (2005 இன் 53) இன் கீழ் அமைக்கப்பட்ட நிதி தொடர்பாக, பேரிடர் மேலாண்மை முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளை ஆணையம் மறுஆய்வு செய்து, அதன் மீது பொருத்தமான பரிந்துரைகளை வழங்கலாம்.

இந்த ஆணையம் 2025 அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிக்கையை தயார் செய்யும். இது  2026 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி ஐந்து ஆண்டு காலத்திற்கு பொருந்தும்.

***

ANU/SMB/IR/RR/KPG

 



(Release ID: 1980779) Visitor Counter : 434