தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அப்பாஸ் அமினியின் 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' என்ற பாரசீக திரைப்படம் சிறந்த படத்திற்கான தங்க மயில் விருது வென்றது; அரசியல் மற்றும் உணர்ச்சி எல்லைகளைக் கடந்து பாரபட்சங்களை எதிர்கொள்ளும் அன்பின் சக்தியை படம் சித்தரிக்கிறது
பல்கேரிய இயக்குநர் ஸ்டீபன் கோமண்டரேவ் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை 'பிளாகாஸ் லெசன்ஸ்' படத்திற்காக பெற்றார் .
'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' படத்தில் நுணுக்கமான, சிறந்த நடிப்புக்காக பவுரியா ரஹிமி சாமுக்கு சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது.
'பார்ட்டி ஆஃப் ஃபூல்ஸ்' படத்தில் பரந்த அளவிலான உணர்ச்சிகளை தடையின்றி வெளிப்படுத்தியதற்காக மெலனி தியரிக்கு சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது.
'காந்தாரா' படத்துக்காக இந்திய திரைப்பட இயக்குநர் ரிஷாப் ஷெட்டிக்கு நடுவர்களின் சிறப்பு விருது கிடைத்துள்ளது. இந்தப் படம் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான கருத்தியல் மோதலை ஆராய்கிறது
சிறந்த அறிமுக படத்திற்கான விருது இயக்குநர்
ரெகர் ஆசாத் கயாவுக்கு 'வென் தி சீட்லிங்க்ஸ் குரோ' படத்திற்காக கிடைத்தது
54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு தங்க மயில் விருது இன்று வழங்கப்பட்டது. கோவாவில் உள்ள டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களைக் கொண்ட சர்வதேச நடுவர் குழு விருதுகளை அறிவித்தது. இந்த விழாவில் 12 சர்வதேச, திரைப்படங்கள், 3 இந்திய திரைப்படங்கள் அடங்கிய 15 தனித்துவமான திரைப்படங்கள் மதிப்புமிக்க தங்க மயில் விருதுக்கு போட்டியிட்டன. இவ்விருது ரூ.40 லட்சம், சான்றிதழ் மற்றும் தங்க மயில் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- பாரசீகப் படமான 'என்ட்லெஸ் பார்டர்ஸ்' சிறந்த படமாக தேர்வு
சிறந்த படத்திற்கான 'தங்க மயில்' விருது அப்பாஸ் அமினி இயக்கிய பாரசீகத்தின் தலை சிறந்த படைப்பான 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சியால் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு மத்தியில் ஒரு ஈரானிய ஆசிரியரின் பயணத்தின் பின்னணியில் உணர்ச்சிபூர்வமான கதைக்களம் கொண்ட படம் இதுவாகும்.
- பல்கேரிய இயக்குநர் ஸ்டீபன் கோமண்டரேவ் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை ப்ளாகாஸ் லெசன் படத்திற்காக வென்றார்
இந்த படம் பிளாகா என்ற விதவையை மையமாகக் கொண்டது,
இவ்விருது ரூ.15 லட்சம், சான்றிதழ் மற்றும் வெள்ளி மயில் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
3. சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருது பவுரியா ரஹிமி சாமுக்கு வழங்கப்பட்டது.
அப்பாஸ் அமினி இயக்கிய எண்ட்லெஸ் பார்டர்ஸ் என்ற பாரசீக திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் பூரியா ரஹிமி சாம் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். "சவாலான படப்பிடிப்பு சூழ்நிலைகளில் தனது சக நடிகர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் தொடர்பு கொள்வதன் பண்புக்காக" இவ்விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இவ்விருது ரூ.10 லட்சம், சான்றிதழ் மற்றும் வெள்ளி மயில் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
4. பார்ட்டி ஆஃப் ஃபூல்ஸ் படத்திற்காக மெலனி தியரிக்கு சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது
பார்ட்டி ஆஃப் ஃபூல்ஸ் படத்திற்காக பிரெஞ்சு நடிகை மெலனி தியரிக்கு சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனது கதாபாத்திரத்தின் பயணத்தில் எதிர்கொள்ளும் நம்பிக்கை முதல் விரக்தி வரையிலான அனைத்து உணர்ச்சிகளையும் நுட்பத்துடன் வெளிப்படுத்தும் ஒரு நடிகைக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக நடுவர்கள் தெரிவித்தனர்.
இந்த விருது ரூ.10 லட்சம், சான்றிதழ் மற்றும் வெள்ளி மயில் பதக்கம் ஆகியவை அடங்கும்.
5. காந்தாரா படத்திற்காக இந்திய திரைப்பட இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு நடுவர்களின் சிறப்பு விருது
இந்திய திரைப்பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்திற்காக நடுவர்களின் சிறப்பு விருதை வென்றுள்ளார்.
தங்க மயில் விருதுக்குப் போட்டியிடும் 15 சிறந்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்த மூன்று இந்தியப் படங்களில் காந்தாராவும் ஒன்றாகும்.
150 நிமிடங்கள் ஓடும் மிகச் சிறந்த கன்னட படமான காந்தாரா, கடந்த ஆண்டு வெளியானதில் இருந்து பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே சிக்கலான மற்றும் துடிப்பான மோதலை நடனம் மற்றும் உணர்ச்சி என்ற கற்பனை ஊடகத்தின் மூலம் சித்தரிப்பதால், கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளுக்கு காந்தாரா மனக்கிளர்ச்சியைத் தருகிறது.
ரிஷப் ஷெட்டி கன்னட திரையுலகில் ஒரு நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் படமான 'காந்தாரா' மூலம் அறியப்பட்ட இவர், 'சர்காரி ஹாய்' படத்திற்காக 66-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தைகளுக்கான படம் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவ்விருது வெள்ளி மயில் பதக்கம், ரூ.15 இலட்சம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.
6. வென் த சீட்லிங்ஸ் குரோ படத்தை இயக்கிய ரெகர் ஆசாத் கயா சிறந்த அறிமுக திரைப்படத்திற்கான இயக்குநர் விருதைப் பெற்றார்.
சிறிய நிகழ்வுகள் மூலம் ஒரு நாளில் வெற்றி பெறும் தந்தை, மகள் மற்றும் தொலைந்து போன ஒரு சிறுவனின் வாழ்க்கையை விளக்கும் படம் இதுவாகும்.
வெள்ளி மயில் பதக்கம், 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழை இந்த விருது உள்ளடக்கியுள்ளது.
திரைப்படத் தயாரிப்பில் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கும் தங்க மயில் விருது உலகின் மதிப்புமிக்க திரைப்பட கௌரவங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான நடுவர் குழுவில் இந்திய திரைப்பட இயக்குனர் சேகர் கபூர், நடுவர் குழுவின் தலைவர், ஸ்பானிஷ் ஒளிப்பதிவாளர் ஜோஸ் லூயிஸ் அல்கைன், பிரெஞ்சு திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜெரோம் பைலார்ட் மற்றும் கேத்தரின் டுசார்ட் மற்றும் ஆஸ்திரேலிய திரைப்பட தயாரிப்பாளர் ஹெலன் லீக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
***
ANU/AD/IR/AG/KRS
(Release ID: 1980551)
Visitor Counter : 238