தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா பாதியைத் தொடுகிறது: துருக்கி திரைப்படமான "எபவுட் ட்ரை கிராஸஸ்" நாளை இடைவிழா திரைப்படமாகத் திரையிடப்படுகிறது
54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா பாதிநிலையை நாளை எட்டுவதால், நூரி பில்ஜ் செலான் இயக்கிய வசீகரிக்கும் துருக்கி சினிமா எபவுட் ட்ரை கிராஸஸ் இடைவிழா திரைப்படமாக திரையிடப்படுகிறது. விறுவிறுப்பான கதையம்சம் மற்றும் அசாதாரண நடிப்புக்குப் பெயர் பெற்ற இந்தப் படம் சர்வதேச பாராட்டைப் பெற்றுள்ளது, அதன் சமீபத்திய விருது 2023 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது ஆகும்.
கேன்ஸ் திரைப்பட விழா 2023, டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா 2023, கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழா 2023, புசான் சர்வதேச திரைப்பட விழா 2023, சாவ் பாலோ சர்வதேச திரைப்பட விழா 2023 உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் இந்தப் படம் ஏற்கனவே தனது முத்திரையைப் பதித்துள்ளது.
படத்தின் கதையில் ஒரு பார்வை
கட்டாயக் கடமையை முடித்த பிறகு ஒரு சிறிய கிராமத்தின் எல்லையிலிருந்து தப்பிக்க ஒரு இளம் ஆசிரியரின் ஆசைகளைச் சுற்றி இந்தப் படம் சுழல்கிறது. இருண்ட வாழ்க்கையின் விரக்தியை எதிர்கொள்ளும் கதாநாயகனின் பார்வை ஓர் ஆதரவான சக ஊழியரான நூரேயின் உதவியுடன் எதிர்பாராத திருப்பத்தை அடைகிறது.
இயக்குநர் நூரி பில்கே செலான்
1959 ஆம் ஆண்டில் இஸ்தான்புலில் பிறந்த நூரி பில்கே செலான், திரைப்படத் தயாரிப்பில் ஒரு முக்கிய நபராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவரது பயணம் 1995 ஆம் ஆண்டில் கோசா என்ற குறும்படத்துடன் தொடங்கியது, இது டி கேன்ஸ் விழாவில் போட்டியிட்டது.
***
ANU/PKV/SMB/AG/KV
(रिलीज़ आईडी: 1979117)
आगंतुक पटल : 161