தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மணிப்புரி திரைப்படம் ‘ஆண்ட்ரோ ட்ரீம்ஸ்’ 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய அரங்கில், கதைஅம்சம் அல்லாத பிரிவின் தொடக்க திரைப்படமாக திரையிடப்பட்டது

Posted On: 22 NOV 2023 12:10PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள ஆண்ட்ரோ என்ற குக்கிராமத்தில் கைத்தறி மற்றும் கைவினை நெசவுக் கடை நடத்தி வருபவர் 60 வயதான திருமதி லாய்பி பான்ஜூபம். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரணக் கதையாகத் தெரிகிறது. ஆனால் திருமதி லாய்பி பான்ஜூபம் சாதாரணப் பெண் அல்ல. அவர் தனது பண்டைய கிராமத்தில் வேரூன்றிய ஆணாதிக்கம், பொருளாதார சிரமங்கள் மற்றும் பழமைவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டே அனைத்து மகளிர் கால்பந்து கிளப்பை நடத்தி வருகிறார்.

ஒரு சிறிய பத்திரிகை கட்டுரையில் அவர் எழுதிய கதைதான் தேசிய விருது பெற்ற இயக்குநர் மீனா லாங்ஜாமின் கவனத்தை ஈர்த்தது, அதுதான் இன்று ‘ஆண்ட்ரோ ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் வெள்ளித்திரையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம், உணர்வுபூர்வமான ஒரு வயதான லாய்பி, அவரது 30 ஆண்டு பழமையான அனைத்து மகளிர் கால்பந்து கிளப்பான ஆண்ட்ரோ மகளிர் மண்டல கால்பந்து கிளப் (அம்மா-எஃப்சி) ஆகியவற்றின் கதையாகும்.  

மணிப்புரி திரைப்படமான ஆண்ட்ரோ ட்ரீம்ஸ் 63 நிமிட திரைப்படம் ஆகும். இந்திய பனோரமாவின் கதை அம்சம் அல்லாத பிரிவில் முதல் திரைப்படமாக அது திரையிடப்பட்டது.

லாய்பி பான்ஜூபானின் உத்வேகமூட்டும் கதையைப் பற்றி பேசிய இயக்குநர் லாங்ஜாம், அவர் தனது குடும்பத்தில் நான்காவது பெண் குழந்தை. அவர் பெரும்பாலும் அவரது குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டார். இருப்பினும், தடைகளை மீறி, அவர் தனது கிராமத்தில் மெட்ரிகுலேஷன் பட்டப்படிப்பை முடித்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றதோடு, ஆரம்பப் பள்ளி ஆசிரியருமானார். இவர் தனது கிராமத்தில் கைத்தறி மற்றும் நெசவு கைவினைக் கடைகளை நிறுவியுள்ளார் என்றார்.

இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது குறித்து படத்தின் நாயகி லாய்பி பான்ஜூபம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இத்திரைப்படம் அவரது யதார்த்த வாழ்க்கையையும், போராட்டங்களையும் முன்வைக்கிறது, அதை உலகிற்கு வழங்கியதற்காக அவர் பெருமைப்படுகிறார்.

கோவாவில் நடைபெறும் 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிஐபி ஏற்பாடு செய்த ஊடக உரையாடலில் லாங்ஜாம் கூறுகையில், "இது கேட்கப்படாத மற்றும் பிற ஊடகங்களில் பிரதிநிதித்துவம் செய்யப்படாத எங்கள் மக்களின் கதை" என்று கூறினார். முக்கிய ஊடகங்களில் மறைக்கப்படும் மணிப்பூர் மக்களின் வாழ்க்கையைக் காண்பிப்பதற்கான ஒரு முயற்சியாக தனது "தற்செயலான" இயக்க முயற்சிகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார். லாய்பி மற்றும் அவரது கால்பந்து கிளப்பின் பெண்கள் அனைத்து முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடும் நிஜ வாழ்க்கையையும் "ஆண்ட்ரோ ட்ரீம்ஸ்” பதிவு செய்கிறது" என்று இந்த ஆர்வத்தால் தூண்டப்பட்ட திட்டத்தின் இயக்குநர் கூறினார்.

 

***

ANU/PKV/SMB/AG/KPG



(Release ID: 1978770) Visitor Counter : 123