பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவம்பர் 23-ம் தேதி 'சந்த் மீராபாய் ஜன்மோத்சவ்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மதுரா செல்கிறார்

சாந்த் மீராபாயின் 525-வது பிறந்த நாளைக் கொண்டாட 'சந்த் மீராபாய் ஜன்மோத்சவ்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 21 NOV 2023 5:49PM by PIB Chennai

2023, நவம்பர், 23 அன்று மாலை 4:30 மணியளவில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், சந்த் மீராபாயின் 525-வது பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'சந்த் மீராபாய் ஜன்மோத்சவ்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். விழாவில் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார். புனித மீராபாய் நினைவாக நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் வெளியிடுகிறார். இந்த  நிகழ்வு சந்த் மீராபாயின் நினைவாக ஆண்டு முழுவதும் நிகழ்வுகள் நடைபெறுவதை குறிக்கும்.

சந்த் மீராபாய் பகவான் கிருஷ்ணர் மீதான பக்திக்கு பெயர் பெற்றவர். இவர் இயற்றிய பல பாசுரங்கள் மற்றும் வசனங்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளன.

-------------

ANU/AD/BS/RS/KRS
(Release ID: 1978546)


(रिलीज़ आईडी: 1978605) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Bengali , English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam