தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் சிறந்து விளங்க இளைஞர்களுக்கு சி.எம்.ஓ.டி இணையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்
54-வது ஐ.எஃப்.எஃப்.ஐ-யில் '48 மணி நேர திரைப்பட சவால்' தொடங்கப்பட்டது
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், படைப்பாளி பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சிறந்த கலைஞர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் திரைப்படத் துறையில் சிறந்து விளங்க இளைஞர்களை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், 'நாளைய படைப்பாக்க மனங்கள் 75' (சி.எம்.ஓ.டி) முன்முயற்சியின் வெற்றியாளர்களுக்கான '48 மணி நேர திரைப்படத் தயாரிப்பு சவாலை' தொடங்கிவைத்துப் பேசினார். ஆர்வமுள்ள நபர்களின் வலுவான படைப்பாற்றல் சமூகத்தை வளர்ப்பதில் 'நாளைய படைப்பாளிகளின்' பங்கைப் பாராட்டிய அமைச்சர், கடுமையான நடுவர் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முயற்சியின் முதல் 75 பங்கேற்பாளர்களைப் பாராட்டினார்.
நாட்டின் தொலைதூரங்களிலிருந்து வரும் இளம் மனங்களை ஊக்குவிப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் அரசு முயற்சியின் ஒரு பகுதியாக சி.எம்.ஓ.டி உள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார். "இந்த ஆண்டின் 'நாளைய படைப்பாக்க மனங்கள் 75-ல் பிஷ்ணுபூர் (மணிப்பூர்), ஜகத்சிங்பூர் (ஒடிசா) மற்றும் சர்தார்பூர் (மத்தியப் பிரதேசம்) போன்ற இடங்கள் உட்பட இந்தியாவின் 19 வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் அவர்களுக்கு ஈடு இணையற்ற வாய்ப்புகளை வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு சி.எம்.ஓ.டி.யில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் தேர்வாளரின் உருக்கமான கதையை திரு தாக்கூர் விவரித்தார். "ஆரம்பத்தில் அவரை கோவாவுக்கு அனுப்புவது குறித்து அவரது பெற்றோருக்கு உறுதியாகத் தெரியவில்லை. சி.எம்.ஓ.டி.யில் அவருக்குக் காத்திருந்த தீவிரமான தேர்வு செயல்முறை மற்றும் நம்பமுடியாத வாய்ப்புகளைப் புரிந்துகொண்ட பிறகு, அவரது கனவுகளை அனுமதிப்பதில் அவரது பெற்றோர் மெய்சிலிர்த்தனர். இந்தச் சிறுமியும் அவரது குழுவினரும் கடந்த ஆண்டு 53 மணி நேர சவாலில் வெற்றி பெற்று ரூ.2,25,000 ரொக்கப் பரிசை பெற்றனர். வெற்றி பெற்ற படமான டியர் டைரி, எதிர்காலத்தில் பெண்களின் பாதுகாப்பு எவ்வாறு புதிய வழியில் இயல்பாக இருக்கும் என்பதை எடுத்துக்காட்டியது. இது போன்ற வெற்றிக் கதைகளைத்தான் இந்தத் தளம் எழுத விரும்புகிறது" என்று அவர் விவரித்தார்.
சி.எம்.ஓ.டி.யின் முந்தைய முயற்சிகளின் சாதனைகளையும் அமைச்சர் பகிர்ந்து கொண்டார். பங்கேற்பாளர்களின் வாழ்க்கையில் இந்த முன்முயற்சியின் தாக்கத்தை அவர் விளக்கினார். 2023 ஆம் ஆண்டின் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சுபர்ணா டாஷ் மற்றும் இந்த ஆண்டு ஐ.எஃப்.எஃப்.ஐ இல் இந்திய அரங்கில் இடம்பெறும் படங்களுக்கு இணைத் தொகுப்பாளர் மற்றும் எடிட் செய்த பாஸ்கர் விஸ்வநாதன் மற்றும் திகந்த்ரா போஸ் போன்ற இளைஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
திரைப்படத் தயாரிப்பு என்பது உள்ளடக்கத்தை உருவாக்குவதுடன் மட்டுமல்லாமல், அதைச் சந்தைப்படுத்துவது மற்றும் அதிக பார்வையாளர்களுக்கு விநியோகிப்பது பற்றியதாகும். நமது இளைஞர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே நெட்வொர்க்கிங் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், செயல்படுத்தவும், இந்த ஆண்டு, ஐ.எஃப்.எஃப்.ஐ ஒரு திறமை முகாமை ஏற்பாடு செய்கிறது. அங்கு 75 படைப்பாக்க மனங்கள், பல பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள், ஸ்டுடியோக்கள் மற்றும் ஓடிடி தளங்களின் பிரதிநிதிகளை சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும், இணைக்கவும் முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அரசு அளித்து வரும் ஆதரவு குறித்து பேசிய அமைச்சர், புதிய ஸ்டார்ட் அப் கொள்கையின் மூலம், நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பாக உருவெடுத்துள்ளது என்றார். "ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஸ்டார்ட்அப் வருகிறது. கோவிட் 19 தொற்றுநோய்களின் போது பெரிய நிறுவனங்கள் கூட போராடிக் கொண்டிருக்கும்போது, இந்தியாவில் ஐம்பது ஸ்டார்ட்அப்கள் யூனிகார்ன் நிலைக்கு உயர்த்தப்பட்டு, இந்திய இளைஞர்களின் சக்தியை நிரூபித்தன" என்று அவர் கூறினார். நாளைய படைப்பாக்க மனங்கள் 75 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஷார்ட்ஸ் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் கார்ட்டர் பில்ச்சர், ஐரோப்பிய திரைப்பட சந்தையின் இயக்குனர் டென்னிஸ் ரூஹ், ஆர்ச்சியின் நிர்வாக தயாரிப்பாளர் ஜான் கோல்ட்வாட்டர், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நீர்ஜா சேகர், தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (திரைப்படங்கள்) மற்றும் என்.எஃப்.டி.சி நிர்வாக இயக்குனர் பிரிதுல் குமார் உள்ளிட்ட மதிப்புமிக்க விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சி.எம்.ஓ.டி.யின் ஒரு பகுதியாக ஷார்ட்ஸ் டிவியுடன் இணைந்து தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் '48 மணி நேர சவாலுக்கு ' ஏற்பாடு செய்துள்ளது.
திரைப்பட சவாலின் ஒரு பகுதியாக, 75 சி.எம்.ஓ.டி பங்கேற்பாளர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர், அவர்கள் 48 மணி நேரத்தில் 'மிஷன் லைஃப்' என்ற தலைப்பில் குறும்படங்களை உருவாக்குவார்கள். திரைப்பட விழாவின் போது, சி.எம்.ஓ.டி பங்கேற்பாளர்கள் உலக சினிமாவின் மாஸ்டர்களால் தொகுக்கப்பட்ட பட்டறைகள் மற்றும் மாஸ்டர் கிளாஸ் அமர்வுகளிலும் கலந்து கொள்வார்கள்.
* * *
ANU/SMB/KASI/RR/KPG
(Release ID: 1978593)
Visitor Counter : 157