சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில், 2022 ஆம் ஆண்டு 11 லட்சம் குழந்தைகள் முதலாவது தட்டம்மை தடுப்பூசி டோசினைத் தவறவிட்டதாகக் கூறப்படும் ஊடகச் செய்திகள் தவறானவை, துல்லியற்றவை

Posted On: 18 NOV 2023 11:58AM by PIB Chennai

உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 11 லட்சம் குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசி டோஸை தவறவிட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தச் செய்திகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, உண்மையான தகவலைப்  பிரதிபலிக்கவில்லை. இந்த செய்திகள் உலக சுகாதார அமைப்பின் யுனிசெஃப் மதிப்பீடுகள்,  தேசிய நோய்த்தடுப்பு செயல்பாடுகள் 2022 அறிக்கையின் கீழ் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை, இவை 2022ம் ஆண்டு ஜனவரி1 முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலஅளவை உள்ளடக்கியதாகும்.

இருப்பினும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2022-23 நிதியாண்டில் ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023  வரை தகுதியான 2,63,84,580 குழந்தைகளில் 2,63,63,270 குழந்தைகளுக்குத்  தட்டம்மை தடுப்பூசியின் (எம்.சி.வி) முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 21,310 குழந்தைகள் மட்டுமே தட்டம்மை கொண்ட தடுப்பூசியின் முதல் டோசினைத் தவறவிட்டனர்

இது தவிர, தடுப்பூசி போடப்படாத அல்லது பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட அனைத்து குழந்தைகளும்  தவறவிட்ட, டோஸ்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன் பல முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2021, 2022ம் ஆண்டுகளில், தடுப்பூசி போடப்படாத, ஓரளவு தடுப்பூசி போடப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறவிட்ட, சரியான அளவு தடுப்பூசிகளுக்காக தீவிர இந்திரதனுஷ், 3.0 மற்றும் 4.0 மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர, 5 வயது வரையிலான குழந்தைகளில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தி 2023 ஆம் ஆண்டில் ஐ.எம்.ஐ 5.0 மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் தட்டம்மை, ரூபெல்லா இயக்கம்  மேற்கொள்ளப்பட்டது, இதில் 9 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் (டெல்லியில் 9 மாதங்கள் முதல் 5 வயது வரை) தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி டோஸ் போடப்பட்டது. இரு மாநிலங்களின் பாதுகாப்பு >95% ஐ எட்டியது.

பல மாநிலங்களில் மொத்தம் 30 மில்லியன் குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசியின் கூடுதல் டோஸ் போடப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு நவம்பரில் நோய்த்தடுப்பு குறித்த ஒரு சிறப்பு ஆலோசனை பகிரப்பட்டது, அதில் 6 மாதங்கள் முதல் < 9 மாதங்கள் வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு டோஸ் தட்டம்மை, ரூபெல்லா அடங்கிய தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறபட்டது.

*****

ANU/SMB/BS/DL


(Release ID: 1977835) Visitor Counter : 259