மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, மீன்வளத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், உலகளாவிய மீன்வள மாநாடு இந்தியா 2023 ஐ நவம்பர் 21, 22 ஆகிய நாட்களில் அகமதாபாத்தில் நடத்துகிறது

Posted On: 16 NOV 2023 3:10PM by PIB Chennai

மீனவர்கள், மீன் வளர்ப்போர் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் பங்களிப்பு, சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், மீன்வளத் துறையின் நிலையான மற்றும் சமமான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், மத்திய அரசின் மீன்வளத் துறை, உலக மீன்வள தினத்தை முன்னிட்டு உலகளாவிய மீன்வள மாநாடு இந்தியா 2023 ஐ நடத்துகிறது.

 

அகமதாபாத்தில் உள்ள குஜராத் அறிவியல் நகரத்தில் 2023 நவம்பர் 21, 22 ஆகிய நாட்களில் 'மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளத்தைக் கொண்டாடுங்கள்' என்ற கருப்பொருளில் இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலாஷ் லிகி ஆகியோர் உடனிருந்தனர்.

 

இந்த மாநாட்டிற்கு வெளிநாட்டுத் தூதரகங்கள், வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், சர்வதேச அமைப்புகள், தொழில் சங்கங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுக்கு மீன்வளத் துறை அழைப்பு விடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா எடுத்துரைத்தார். உலக வங்கி, உணவு மற்றும் வேளாண் அமைப்பு போன்ற முக்கிய அமைப்புகள், பல்வேறு நாடுகள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளன, அவற்றை நடத்த அவர்கள் ஆவலுடன் உள்ளனர் என்று திரு ரூபாலா கூறினார்.

 

இறால் வளர்ப்பு, மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாடு, நிதி சேர்க்கை, உள்நாட்டு மீன் நுகர்வை ஊக்குவித்தல் மற்றும் மீன்வளத்தின் நிலையான வளர்ச்சிக்கான வழி குறித்து மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மத்திய, மாநில அரசுகள்/ யூனியன் பிரதேசங்கள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் உள்ள பயனாளிகளின் ஒட்டுமொத்த முயற்சியால் இந்திய மீன்வளத் துறை உள்நாட்டு மீன் உற்பத்தி, ஏற்றுமதி, நீர்வாழ் உயிரின வளர்ப்பு, குறிப்பாக உள்நாட்டு மீன்வளம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் காட்டியுள்ளது என்று திரு பர்ஷோத்தம் ரூபாலா கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய ஆட்சியில் மீன்வளத் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றும், மீன் உற்பத்தி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

 

நிலையான வளர்ச்சி மற்றும் உலகளாவிய மீன்வள மாநாடு இந்தியா 2023 ஆகியவற்றில் அமைச்சகம் கவனம் செலுத்தி வருவதாகவும், இது மீனவர்கள், விவசாயிகள், தொழில்துறை, கடலோர சமூகங்கள், ஏற்றுமதியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், கண்காட்சியாளர்கள் போன்ற அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரே மேடையில் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், தொடர்புடைய தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள் மற்றும் சந்தை இணைப்பு வாய்ப்புகளை இணைக்கவும் ஒரு தளத்தை வழங்குகிறது என்று இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார். கடலோரப் பயணம், மீன்வள உள்கட்டமைப்பு போன்ற மீன்வளத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் அரசு முன்முயற்சிகள் குறித்தும் இந்த மாநாட்டில் விளக்கப்படும் என்று அவர் மேலும் எடுத்துரைத்தார்.

 

 

2024-25ஆம் நிதியாண்டுக்குள் 22 மில்லியன் மெட்ரிக் டன் மீன் உற்பத்தி இலக்கை அடைவது மட்டுமல்லாமல், ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைவதையும் இந்திய மீன்வளத் துறை, மீன்வளத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், மத்திய அரசின் மீன்வளத் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது . நாட்டில் உள்ள 3 கோடி மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் மற்றும் வாழ்வாதாரங்களை வழங்குவதில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

 

*******


(Release ID: 1977356)

ANU/PKV/IR/RR/KRS



(Release ID: 1977428) Visitor Counter : 136