நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டுத் வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் 21 வது மின் ஏலத்தில் 2.84 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5830 மெட்ரிக் டன் அரிசியை ஏலதாரர்கள் வாங்கியுள்ளனர்

Posted On: 16 NOV 2023 1:29PM by PIB Chennai

அரிசி, கோதுமை மற்றும் ஆட்டா ஆகியவற்றின் சில்லறை விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் சந்தை விற்பனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோதுமை மற்றும் அரிசி ஆகியவற்றுக்கு வாராந்திர மின்னணு ஏலங்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக 15.11.2023 அன்று நடைபெற்ற 21-வது மின்-ஏலத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 1.79 லட்சம் மெட்ரிக் டன் அரிசி, உள்நாட்டுத் திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்டது.

இதில் 2.84 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5830 மெட்ரிக் டன் அரிசி ஆகியவை 2334 ஏலதாரர்களுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.  

இத்துடன் கூடுதலாக, 2.5 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வெளிச்சந்தைத் திட்டத்தின் கீழ் கேந்திரிய பந்தர், என்.சி.சி.எஃப், நாஃபெட் போன்ற அரசு சார்ந்த மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோதுமையைக் 'பாரத் ஆட்டா' பிராண்டின் கீழ் கிலோவுக்கு ரூ. 27.50 க்கு மிகாமல் பொதுமக்களுக்கு இவை விற்பனை செய்யகின்றன.  14.11.23 வரை 15337 மெட்ரிக் டன் கோதுமையை ஆட்டாவாக மாற்றுவதற்காக இந்த 3 கூட்டுறவு சங்கங்கள் வாங்கியுள்ளன.

**************

ANU/PKV/PLM/RS/KV


(Release ID: 1977368) Visitor Counter : 113