பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 50-வது சதம் அடித்த விராட் கோலிக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 15 NOV 2023 6:43PM by PIB Chennai

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை  விராட் கோலி பெற்றுள்ளார் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

இன்று, விராட் கோலி தது 50 வது ஒருநாள் சதத்தை அடித்தது மட்டுமல்லாமல், சிறந்த விளையாட்டுத் திறனை வரையறுக்கும் வகையில்  விடாமுயற்சிக்கான உணர்வையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை, அவரது நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் அசாதாரண திறமைக்கு ஒரு சான்றாகும்.

அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால சந்ததியினருக்கு அவர் தொடர்ந்து ஒரு முன்னுதாரணத்தை அமைக்கட்டும்".

***

(Release ID: 1977152)

ANU/AD/PLM/RS/KRS


(रिलीज़ आईडी: 1977211) आगंतुक पटल : 165
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Malayalam