பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய சிந்தனை புதிய கதை என்ற தலைப்பில் ஸ்மிருதி இரானியுடன் ஒரு வானொலிப் பயணம் நிகழ்ச்சி ' நவம்பர் 15 முதல் அகில இந்திய வானொலி (ஆகாசவாணி)யில் ஒலிபரப்பாகிறது

प्रविष्टि तिथि: 14 NOV 2023 3:26PM by PIB Chennai

தொழில்முனைவு, திறன் மேம்பாடு, விளையாட்டு, சுகாதாரம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களின் வெற்றியைக் கொண்டாடும் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தொகுத்து வழங்குகிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய ஒலிபரப்பாளரான அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 9 மணி முதல் 10 மணி வரை வாராந்திர ஒரு மணி நேர நிகழ்ச்சி புதிய சிந்தனை புதிய கதை - ஸ்மிருதி இரானியுடன் ஒரு வானொலி பயணம்' என்ற நிகழ்ச்சி லிபரப்பப்படும்.

முதல் நிகழ்ச்சி நவம்பர் 15 ஆம் தேதி அகில இந்திய வானொலி கோல்டு 100.1 மெகாஹெர்ட்ஸ் சேனலில் ஒலிபரப்பாகிறது. இது நாடு முழுவதும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களால் ஒளிபரப்பப்படும். நியூஸ்ஒன்ஏஐஆர் செயலி, அகில இந்திய வானொலி இணையதளம் www.newsonair.gov.in, அகில இந்திய வானொலி யூடியூப் சேனல் @airnewsofficial மற்றும் அதன் பல்வேறு சமூக ஊடக தளங்களில் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.

அரசின் முன்முயற்சியுடன் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் இந்தியாவில் பெண்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களின் பங்கு குறித்த அசாதாரணமான கதைகளை இந்த நிகழ்ச்சி கொண்டாடும். முதல் நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சுயதொழில் புரியும் பெண்கள் தங்களது வெற்றிக் கதைகளையும், அரசின் முயற்சிகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் பகிர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள், அவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களின் நன்மைகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து விளக்குவார்கள்.

 

***


ANU/SMB/BS/RR/KPG

 


(रिलीज़ आईडी: 1976929) आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Assamese , Urdu , हिन्दी , Punjabi , Odia