நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி அமைச்சகம் 2027 க்குள் 1404 மில்லியன் டன் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது

Posted On: 13 NOV 2023 4:18PM by PIB Chennai

2027 ஆம் ஆண்டிற்குள் 1404 மில்லியன் டன்னும், 2030 ஆம் ஆண்டிற்குள் 1577 மெட்ரிக் டன்னும்  நிலக்கரி உற்பத்தி செய்ய நிலக்கரி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் கூடுதலாக 80 ஜிகாவாட் அனல் மின் திறனை வழங்குவதற்கான கூடுதல் நிலக்கரி தேவையை அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பங்களிப்புகள் காரணமாக வரும் காலங்களில் உற்பத்தி தேவைகளைப் பொறுத்து உண்மையான தேவை குறைவாக இருக்கலாம்.

நிலக்கரி அமைச்சகம் தனது உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தில் கூடுதல் அளவு நிலக்கரியை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே இது அனல் மின் நிலையங்களுக்கு உள்நாட்டு நிலக்கரி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யும்.

நடப்பாண்டில் நிலக்கரி இருப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு தற்போது 20 மெட்ரிக் டன்னாகவும், சுரங்கங்களில் 41.59 மெட்ரிக் டன்னாகவும் உள்ளது. மொத்த இருப்பு போக்குவரத்து மற்றும் சுரங்கங்களில் இருப்பு உட்பட கடந்த ஆண்டில் 65.56 மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டு 73.56 மெட்ரிக் டன் ஆகும், இது 12% வளர்ச்சியைக் காட்டுகிறது.

நிலக்கரி, மின்சாரம் மற்றும் இரயில்வே அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனஅதற்கேற்ப சீரான நிலக்கரி விநியோகம் பராமரிக்கப்பட்டு வருகிறதுஇன்று வரை கடந்த மூன்று மாதங்களில், அனல் மின் தேவை, கடந்த ஆண்டை விட, 20 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

******

ANU/SMB/BS /KPG

 



(Release ID: 1976691) Visitor Counter : 100