பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2023 9:59PM by PIB Chennai

நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:

நமது கிரிக்கெட் அணியின் அற்புதமான செயல்பாட்டினால் தீபாவளி இன்னும் சிறப்பானதாக அமைந்தது!

நெதர்லாந்திற்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்! இது, திறமை மற்றும் அணி  முயற்சியின்  அற்புதமான வெளிப்பாடு.

அரையிறுதிக்கு வாழ்த்துகள்! இந்தியா மகிழ்ச்சியில் திளைக்கிறது.”

 

*****

ANU/SMB/BR/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1976552) வருகையாளர் எண்ணிக்கை : 179