பிரதமர் அலுவலகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு
மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்
பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு தொடர்பாக இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர்
பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண இரு தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்
விரிவான உத்திசார் கூட்டுச் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்
Posted On:
03 NOV 2023 6:48PM by PIB Chennai
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-11-2023) தொலைபேசியில் பேசினார்.
மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பயங்கரவாதம், மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு குறித்து இரு தலைவர்களும் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.
பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானம் தொடர்பான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண இரு தலைவர்களும் அழைப்பு விடுத்தனர். அந்தப் பிராந்தியத்தில் நீடித்த அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரிவான உத்திசார் கூட்டுச் செயல்பாட்டுக் கட்டமைப்பில், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
Release ID: 1974533
*****
AD/PLM/KRS
(Release ID: 1974563)
Visitor Counter : 117
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam