பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிரமோத் பகத்துக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 27 OCT 2023 7:55PM by PIB Chennai

ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிரமோத் பகத்துக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிக்காக பகத்தின் உறுதியையும் அபாரத் திறமையையும் அவர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.3 போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு வாழ்த்துகள்.

அவரது மன உறுதியும், அபாரத் திறமையும் நமது தேசத்திற்கு மிகுந்த பெருமையை அளித்துள்ளது.

******

ANU/PKV/SMB/KPG


(रिलीज़ आईडी: 1973783) आगंतुक पटल : 132
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam