சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் குறிப்பிடத்தக்க சாதனைகள்

Posted On: 01 NOV 2023 12:26PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தனது அனைத்து அலுவலகங்களிலும், நிலுவையில் உள்ள விவாகரங்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் தூய்மை குறித்த சிறப்பு இயக்கம் 3.0- நடத்தியது. நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைத்தல், தூய்மையை நிறுவனமயமாக்குதல், உள் கண்காணிப்பு செயல்முறையை வலுப்படுத்துதல், பதிவேடுகள் மேலாண்மையில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல், மேம்பட்ட பதிவேடு மேலாண்மைக்காக பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவை இந்த இயக்கத்தின் நோக்கங்களாகும்.

இந்த இயக்கத்தைத் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக சுகாதாரத் துறையின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் மற்றும் சிறப்பு இயக்கத்தின் 3.0-ன் இணைச் செயலாளரும் ஒருங்கிணைப்பு அதிகாரியுமான திரு எலாங்பம் ராபர்ட் சிங் ஆகியோர் வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த இயக்கத்தின் செயலாக்கக் கட்டத்தின் முன்னேற்றம் குறித்து, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் இணையதளமான https://scdpm.nic.in என்ற தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு இயக்கம் 3.0-ன் போது 01.10.2023 முதல் 31.10.2023 வரையிலான காலகட்டத்தில், 224 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகளுக்கும், 3,260 பொதுமக்களின் குறைகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தீர்வு கண்டுள்ளது. 22,454 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 8,621 கோப்புகள் தொடர்பாக முடிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், 1,787 தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 35,268 சதுர அடி இடம் அலுவலகப் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பொருட்கள் விற்பனை மூலம் ரூ. 13,70,211  வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

---

ANU/PKV/PLM/KPG



(Release ID: 1973762) Visitor Counter : 62