பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

மறைந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லால் நினைவு தபால்தலை வெளியீடு

"சித்ரகூட் வந்தது எனக்கு அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது"
"மகான்களின் பணியால் சித்ரகூட்டின் மகிமையும் முக்கியத்துவமும் என்றென்றும் நிலைத்திருக்கும்"

"நமது தேசம் பல மகான்களின் பூமியாகும். அவர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களை கடந்து, பெரிய நன்மைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்கள்"

"ஒருவரின் வெற்றி அல்லது செல்வத்தைப் பாதுகாக்க தியாகம் மிகவும் பயனுள்ள வழியாகும்"

"அரவிந்த் பாயின் பணி மற்றும் ஆளுமையை நான் அறிந்தபோது, நான் ஒரு உணர்ச்சிபூர்வமான இணைப்பை ஏற்படுத்திக் கொண்டேன்"

"இன்று, நாடு பழங்குடி சமூகங்களின் மேம்பாட்டிற்கு முழுமையான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது"

Posted On: 27 OCT 2023 4:10PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூட்டில் இன்று (27.10.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளை 1968 ஆம் ஆண்டில் பரம் பூஜ்ய ரஞ்சோதாஸ்ஜி மகராஜ் என்பவரால் நிறுவப்பட்டது. ஸ்ரீ அரவிந்த் பாய் மஃபத்லால் பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜால் ஈர்க்கப்பட்டு அறக்கட்டளையை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோர்களில் ஒருவரா திகழ்ந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லால், நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சித்ரகூட் என்ற தெய்வீக பூமியை ராமர், சீதா தேவி மற்றும் லட்சுமணன் ஆகியோரின் வசிப்பிடமாக புனிதர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்று கூறினார். சிறிது நேரத்திற்கு முன்பு தாம், ஸ்ரீ ரகுபீர் கோயில் மற்றும் ஸ்ரீ ராம் ஜானகி கோவிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்ததை திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஹெலிகாப்டர் மூலம் சித்ரகூட் செல்லும் வழியில் காமத்கிரி பர்வதத்திற்கு மரியாதை செலுத்தியது குறித்தும், பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது குறித்தும் அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமர் மற்றும் ஜானகி தரிசனம், துறவிகளின் வழிகாட்டுதல் மற்றும் ஸ்ரீ ராம் சமஸ்கிருத மகாவித்யாலயாவின் மாணவர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறன் ஆகியவை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். மறைந்த ஸ்ரீ அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை அனைத்து ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழைகளின் சார்பாக ஏற்பாடு செய்த ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளைக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஜங்கிகுண்ட் சிகித்சாலயாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட பிரிவு, லட்சக்கணக்கான ஏழைகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கும் என்றும், ஏழைகளுக்கு சேவை செய்யும் பணி வரும் காலங்களில் அதிக உயரங்களை எட்டும் என்றும் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். மறைந்த அரவிந்த் பாய் மஃபத்லாலின் நினைவாக தபால்தலையை வெளியிடுவது மிகுந்த மனநிறைவையும் பெருமையையும் அளிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

அரவிந்த் மஃபத்லாலின் பணிகளை குடும்பத்தினர் முன்னெடுத்துச் செல்வதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். பல்வேறு விருப்பங்கள் இருந்தபோதிலும், நூற்றாண்டு விழா நடைபெறும் இடமாக சித்ரகூட் தேர்வு செய்யப்பட்டதை பிரதமர் குறிப்பிட்டார்.

 

மகான்களின் பணியால் நித்தியமாக்கப்பட்ட சித்ரகூட்டின் மகிமையையும் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது உத்வேகத்தை நினைவுகூர்ந்தார். பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜின் பயணத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு சமூக சேவையின் உன்னதமான தன்மையைப் பற்றி அவர் கூறிய கருத்துக்களை பிரதமர் எடுத்துரைத்தார். பரம் பூஜ்ய ரஞ்சோதாஜி மகராஜ் பல நிறுவனங்களை நிறுவியதாகவும் அவை இன்னும் மனிதகுலத்திற்கு சேவை செய்கின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இயற்கை சீற்றத்தின் போது பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜின் பணிகளும் முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டார். நமது தேசத்தின் குணம், தன்னைத் தாண்டி உலகளாவிய நிலைக்குச் செல்லும் மகான்களை ஈன்றெடுக்கிறது என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

 

பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜின் வழிகாட்டுதலில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அரவிந்த் மஃபத்லாலின் வாழ்க்கையை புனிதர்களின் சகவாசத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக திரு நரேந்திர மோடி மேற்கோள் காட்டினார். இந்தச் சந்தர்ப்பத்தில் அரவிந்த் பாயின் உத்வேகங்களை நாம் உள்வாங்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். அரவிந்த் பாயின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையை நினைவு கூர்ந்த பிரதமர், நாட்டின் முதல் பெட்ரோகெமிக்கல் திட்டத்தை நிறுவியவர் அவர் தான் என்று கூறினார். தொழில் மற்றும் விவசாயத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். பாரம்பரிய ஜவுளித் தொழிலின் பெருமையை மீட்டெடுப்பதில் மறைந்த மஃபத்லால் முக்கிய பங்கு வகித்தார் எனவும் அவரது பங்களிப்புகளுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

ஒருவரின் வெற்றி அல்லது செல்வ வளத்தைப் பாதுகாக்க தியாகம் மிகவும் பயனுள்ள வழியாகும் என்று கூறிய பிரதமர், அரவிந்த் பாய் மஃபத்லால் அதை ஒரு பணியாக மாற்றி தது வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார் என்று கூறினார். ஸ்ரீ சத்குரு சேவா அறக்கட்டளை, மஃபத்லால் அறக்கட்டளை, ரகுபீர் மந்திர் அறக்கட்டளை, ஸ்ரீ ராம்தாஸ் ஹனுமான் ஜி அறக்கட்டளை, ஜே.ஜே குழும மருத்துவமனைகள், பார்வையற்றோர் சங்கம் போன்ற பல நிறுவனங்கள், சாரு தாரா ஆரோக்கிய மண்டல் போன்ற பல நிறுவனங்கள் ஒரே கொள்கையுடன் செயல்படுகின்றன  என்றும் சேவையை  அவை முன்வைக்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார். ஸ்ரீ ரகுபீர் மந்திர் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்குவதுடன் லட்சக்கணக்கான துறவிகளுக்கு மாதாந்திர உணவு தானியங்களுக்கு ஏற்பாடு செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் குருகுலத்தின் பங்களிப்புகள் குறித்தும், ஜானகி மருத்துவமனையில் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் அவர் பேசினார். அயராது உழைக்க ஆற்றலை வழங்கும் இந்தியாவின் சக்திக்கு இது சான்று என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். கிராமப்புற தொழில் துறையில் பெண்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

 

சத்குரு நேத்ரா சிகித்சாலயா இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிறந்த கண் மருத்துவமனைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், 12 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளதை அவர் எடுத்துரைத்தார். இந்த அமைப்பு காசியில் நடத்தி வரும் ஸ்வஸ்த திருஷ்டி சம்ருத் காசி இயக்கம் குறித்து பேசிய பிரதமர், வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அறுவை சிகிச்சைகள் மற்றும் கண் சிகிச்சை முகாம்கள் போன்றவற்றை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பரிசோதித்ததாகத் தெரிவித்தார். சிகிச்சை பெற்ற அனைவர் சார்பிலும் சத்குரு கண் மருத்துவமனைக்கு திரு  நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

 

சேவைக்கு வளங்கள் முக்கியம் என்றாலும், அர்ப்பணிப்பு மிக முக்கியமானது என்று பிரதமர் கூறினார். அரவிந்தின் களப்பணியின் தரத்தை நினைவு கூர்ந்த அவர், பிலோடா மற்றும் தாஹோத் ஆகிய பழங்குடி பகுதிகளுக்காக அவர் ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டார். சேவை மனப்பான்மை மற்றும் பணிவு ஆகியவற்றையும் திரு நரேந்திர மோடி விவரித்தார். அவரது பணி மற்றும் ஆளுமையை அறிந்தபோது, அவரது பணிக்காக உணர்ச்சிபூர்வமான இணைப்பை ஏற்டுத்திக்கொண்டதாக  அவர் கூறினார்.

 

சித்ரகூட், நானாஜி தேஷ்முக் பணியாற்றிய இடம் என்றும், பழங்குடி சமூகத்திற்கு சேவை செய்வதில் அவரது முயற்சிகள் அனைவருக்கும் சிறந்த உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் கூறினார். அந்த லட்சியங்களைப் பின்பற்றுவதன் மூலம் பழங்குடி சமூகத்தின் நலனுக்காக நாடு விரிவான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய பிரதமர், பிர்சா முண்டாவின் பிறந்த நாளில் பழங்குடியின கௌரவ தினம்  கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்டார். பழங்குடி சமூகத்தின் பங்களிப்பு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றுவதற்காக பழங்குடியின  அருங்காட்சியகங்களின் வளர்ச்சி, பழங்குடியின குழந்தைகளின் கல்விக்கான ஏகலவ்யா உறைவிடப் பள்ளிகள் மற்றும் வன சம்பதா சட்டம் போன்ற கொள்கை முடிவுகள் குறித்தும் அவர் பேசினார். பழங்குடியின சமூகத்தினரை அரவணைக்கும் பகவான் ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதங்களும் எங்களின் இந்த முயற்சிகளுடன் தொடர்புடையவை என்று அவர் தெரிவித்தார். இந்த ஆசீர்வாதம் ஒரு இணக்கமான மற்றும் வளர்ந்த இந்தியாவின் இலக்கை நோக்கி நம்மை வழிநடத்தும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

 

மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு  சிவராஜ் சிங் சவுகான், ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளையின் தலைவர் திரு விஷாத் பி மஃபத்லால் மற்றும் ஸ்ரீ ரகுபீர் மந்திர் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு ரூபால் மஃபத்லால் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 1971984)
ANU/PKV/PLM/RS/KRS



(Release ID: 1972141) Visitor Counter : 80