பிரதமர் அலுவலகம்
காலாட்படை தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் அனைத்து வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2023 1:52PM by PIB Chennai
காலாட்படை தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் அனைத்து வீரர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் பொது தகவல் பிரிவு துணைத் தலைமை இயக்குநரின் பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதவில் கூறியிருப்பதாவது:
“இந்திய ராணுவத்தின் அனைத்து வீரர்களுக்கும் காலாட்படை தின நல்வாழ்த்துகள். நமது காலாட்படையின் இடைவிடாத தைரியத்தையும், விடாமுயற்சியையும் கௌரவிக்கும் நாள் இது. அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கான அவர்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. அவர்களின் அயராத செயல்பாடும், ஈடு இணையற்ற வீரமும் சோதனை காலத்தில் துணை நின்றுள்ளன.”
***
ANU/PKV/PLM/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1972013)
வருகையாளர் எண்ணிக்கை : 179
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam